அரசு இல்லத்தில் இன்று குடியேறும் விஜய்? பாமணி வீட்டில் இதுவரை யார் யார் தங்கி இருந்தனர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய், நீலாங்கரை வீட்டில் இருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள பாமணி இல்லத்தில் இன்று குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் இருக்கும் பாமணி இல்லத்திற்கு இன்று வருகை தந்த முதல்வர் விஜய், தனது அலுவல் பணிகளை சிறிது நேரம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் இருந்து 15 நிமிடத்தில் இந்த இல்லத்திற்கு வந்துவிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமை செயலகம் வந்து செல்கிறார். நீலாங்கரையில் இருந்து தலைமை செயலகம் வரை சுமார் 19 கி.மீட்டர் பயணித்து முதல்வர் வரும் நிலையில் அவரது பாதுகாப்பிற்காக வழிநெடுக காவலர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அதேபோல, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால், இதனை தவிர்க்கும் விதமாக முதல்வர் விஜய் தலைமை செயலகம் அருகிலேயே வீடு பார்ப்பதாக தகவல் வெளியானது.

CM Vijay move into the Govt residence Do you know Bamani house has been used for until now

பாமணி இல்லத்தில் குடியேறும் விஜய்

இந்த நிலையில்தான், அரசு விருந்தினர் இல்லமாக இருந்த பாமணி இல்லத்தை முதல்வர் விஜய் முகாம் அலுவலகமாக பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள பாமணி இல்லம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. வெற்றி இல்லம் என்ற பெயரில் மாற்றப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில வாரங்களாக முழு வீச்சில் பணிகள் நடைபெற்ற நிலையில் முதல்வர் விஜய் இந்த வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் முதல்வர் விஜய் பாமணி இல்லத்தை பார்வையிட்டார். மேலும், இன்று முதல் முதல்வர் விஜய் பாமணி இல்லத்தில் குடியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. பசுமைவழிச் சாலையில் இருக்கும் இந்த பாமணி இல்லம், சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெறும் 15 நிமிட தூரத்தில் தான் உள்ளது.

முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி என்பதால், இங்கு எப்போதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். பாமணி இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு இல்லத்தில்தான் அமைச்சர் ராஜ்மோகன் வசித்து வருகிறார். பாமணி இல்லத்தின் அருகிலேயே அமைச்சர்கள் பலரும் தங்கியிருப்பதால், முக்கியமான ஆலோசனைகள் நடத்த வேண்டும் என்றால் உடனடியாக சந்திக்க முடியும்.

யார் யார் இந்த வீட்டில் இருந்துள்ளனர்

அதேபோல, அரசு அதிகாரிகளும் எளிதாக வந்து செல்ல முடியும் என்பதால், முதல்வர் விஜய், பாமணி இல்லத்தை முகாம் அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வர் வீடு அமைந்து இருக்கும் பொதிகை வளாகத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ரஜேஷ், பர்வேஷ், விக்னேஷ், வினோத் உள்ளிட்ட அமைச்சர்களின் இல்லமும் இங்கேதான் உள்ளது. முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லம் அருகிலேயே இது உள்ளது.

இந்த வீட்டிற்கு அருகிலேயே தலைமை நீதிபதியின் இல்லமும் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை நதியான "பாமணி ஆறு" பெயரை ஒட்டி இந்த வீடு இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக இந்த இல்லத்தில் முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். தலைமை செயலாளராக இருந்த இறையன்புவும் இங்கேதான் தங்கியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+