Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு.. பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், சுற்றுலாதளங்களை திறக்க முதல்வர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், பார்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மலை வாசல் தளங்களில் உள்ள உயிரியல் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள்செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போதுள்ள நோய்த் தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் மேலும், மாநிலத்தில் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில்
நடைமுறையில் உள்ள கோவிட் 19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06.09 2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. முன்பே அறிவித்தவாறு, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு எப்போது

பள்ளிகள் திறப்பு எப்போது

1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும் இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

சுழற்சி முறை

சுழற்சி முறை

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் அனுமதிக்கப்படுகின்றன. • அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். * அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Coleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

உயிரியல் பூங்காக்கள்

உயிரியல் பூங்காக்கள்

* கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சிமாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

10 மணி வரை திறக்கலாம்

10 மணி வரை திறக்கலாம்

இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-9-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் | தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

அங்கன்வாடிகள்

அங்கன்வாடிகள்

அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும் .

நீச்சல் குளங்கள்

நீச்சல் குளங்கள்

நியானம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களில் பொறுப்பாளர்கள் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

வேலை பயிற்சி

வேலை பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . தங்கும் விடுதிகள். கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். செயல்பட அனுமதிக்கும் அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருப்பது தொடர்புடைய நிறுவனங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் " இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+