புயலை கிளப்பும் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை- இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்ச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.

தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் நிதி நிலவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பதை சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த்து.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவைகளுக்கான செலவுகள் உள்ளிட்டவை இந்த 120 பக்க வெள்ளை அறிக்கையில் இடம்பெற உள்ளது. இது தொடர்பாக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதங்களும் நடைபெற உள்ளன.
அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் 13-ந் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். முன்னதாக நாளை மறுநாள் 10-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சபாநாயகர் அப்பாவு தலைமையிலான இந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். பொதுவாக சட்டசபை கூட்டம் தொடங்கிய பின்னர் முதல் நாளில்தான் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications