குடும்ப அட்டைதாரர்களுக்கு நிம்மதி.. இனி ஒருத்தரும் கை வைக்க முடியாது.. தமிழ்நாடு அரசு அதிரடியை பாருங்க
சென்னை: ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தற்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது.. ஆனாலும், பல ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்களை வழங்காமல் கள்ளச் சந்தையில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

நியாய விலைக்கடைகள்: அதேசமயம் பல ரேஷன் கடைகளில் வெளி மாநிலத்திற்கும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டும் வருகின்றது... அதனால்தான், இவைகளை களைய தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. கடத்தல், பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல, மாத இறுதியில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்காத பொருள்களுக்கும் வாங்கியதாக, ரேஷன் கடை ஊழியர்கள் பதிவு செய்கிறார்களாம்.. இதுகுறித்தும் புகார்கள் நிறைய வர ஆரம்பித்துவிட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்திருந்தது.
அப்படியிருந்தும், ரேஷன் கடையில் முறைகேடுகள் நடந்து கொண்டுதானிருக்கிறது.. இதோ நேற்றுகூட திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வேலம்பாளையம்: அங்குள்ள வேலம்பாளையம் பகுதியில் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.. அந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் வேலம்பாளையம் ரேசன் கடை இயங்கி வருகிறது.. அந்த ரேஷன்கடையில் ராமாத்தாள் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.. ரேஷன் கார்டே இல்லாமல், சுமார் 20 கிலோ பருப்பை ஒருவருக்கு தந்துள்ளார்.. அந்த நபரும், 20 கிலோ பருப்பை, தன்னுடைய பைக்கில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார்.
இதைப்பார்த்ததுமே, அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. "ரேஷன் கார்டு இல்லாமல், இத்தனை கிலோ பருப்பை மொத்தமாக ஏன் கொண்டு போறீங்க?" என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அத்துடன், அந்நபரின் பைக்கையும் வழிமறித்து தடுத்து நிறுத்தி, 20 கிலோ பருப்புடன் வீடியோ எடுத்துள்ளனர்.. தன்னை வீடியோ எடுப்பதை பார்த்ததுமே அந்த நபர், பருப்பை கொண்டுபோய், மறுபடியும் ரேஷன் கடையிலேயே வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ராமாத்தாள்: இதற்கு பிறகும் ஆவேசம் தணியாத பொதுமக்கள் நேராக, ரேஷன் கடை ஊழியர் ராமாத்தாளிடம் சென்றுள்ளனர்.. "ஒரே ஒரு தனி நபருக்கு இவ்வளவு பருப்பை எதுக்கு தர்றீங்க? அவரது ரேஷன் கார்டு எங்கே? நாங்க வந்து பருப்பை கேட்டால் மட்டும் ஸ்டாக் இல்லைன்னு சொல்லிடறீங்களே?" என்று கேள்வி எழுப்பினார்கள்..
அதற்கு ரேஷன் ஊழியர் ராமாத்தாள், "பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் இங்கே வரட்டும், அவர்களிடடம் நான் பேசிக்கிறேன்" என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார். ராமாத்தாளின் இந்த பதிலையும், பொதுமக்கள் வீடியோ எடுத்துவிட்டனர். அதை இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர்..
அதிரடி நடவடிக்கை: இதையடுத்து, இந்த ரேஷன் கடை சம்பவம் கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் சங்க அலுவலர்கள் கவனத்துக்கு சென்றது. பிறகு, கூட்டுறவு சார் பதிவாளர், கடை விற்பனையாளர் ராமாத்தாளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications