சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம.. கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்வு: தமிழக அரசு அரசாணை

தமிழக கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளின் வயதையும், தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாத ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

TN Gov raises monthly incentive for VIllage Temple Priest

மறைந்த ஜெயலலிதா இருந்தபோதிருந்தே ஓய்வூதியத்தொகையை ரூ.750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.. அதற்கான ஆணையையும் அவர் வெளியிட்டிருந்தார்.

அதாவது, திருக்கோயில்களில் 20 வருஷமாக பணிபுரிந்து 60 வயதை நிறைவு செய்து ஓய்வு பெற்ற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியமாக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

"184"ஐ முந்துமா மிஷன் 200.. தடுக்க துடிக்கும் அதிமுக.. அதிரடி புயலை கிளப்ப தயாராகும் திமுக!

அந்த வகையில், தற்போது அவர்களின் ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.. கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது 110-வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பூசாரிகள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்காமல் பூசாரிகளது வயது முதிர்ந்த காலத்தில் வருமானம் இல்லாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் சிரமப்பட்டு வருவதாகவும், அதனால், பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்துவதுடன் தகுதியான பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மூலம் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக கோயில் பூசாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து கிராம பூசாரிகளின் ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி உள்ளது.

English summary
TN Gov raises monthly incentive for Village Temple Priest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X