தீபாவளி போனஸ் எவ்ளோ? தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அறிவிக்க கூடாது- அன்புமணி கோரிக்கை!
சென்னை : பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது பற்றி தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், பொதுத்துறை நிறுவனங்கள் விரைந்து, தொழிற்சங்கத்தினருடன் பேசி போனஸ் அறிவிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகை
வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், போனஸ் தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து இன்னும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

தீபாவளி போனஸ்
இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்கக் கோரி பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படக் கூடிய தொழிற்சங்கங்கள் அந்தந்த நிர்வாகங்களிடம் கோரிக்கை அளித்துள்ளன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை அறிவிப்பு இல்லை
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் ஆகியவற்றை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த விஷயத்தில் தேவையற்ற தாமதம் கூடாது.

அரசின் மௌனம்
போனஸ், முன்பணம் ஆகியவை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக நிர்வாகங்களிடம் கடிதம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுத் தரப்பின் மவுனம் ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

புதுத்துணி வாங்க வேண்டாமா?
தீபாவளி திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. போனஸ் மற்றும் முன்பணத் தொகை மூலம் தான் தீபஒளிக்கு தேவையான புத்தாடை உள்ளிட்ட பொருட்களை தொழிலாளர்களால் வாங்க முடியும். இந்த அவசியத்தையும், அவசரத்தையும் தமிழக அரசு உணர வேண்டும்.

தன்னிச்சையாக அறிவிக்கக்கூடாது
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்க அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications