ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு.. தமிழக அரசு உத்தரவு
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.

இதையடுத்து காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகாரபன் திட்டம் செயல்படுத்தியதால், நிலத்தடி நீர், மண்வளம், நீர்பாசன ஆதராங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய போகிறது.
மீத்தேன், ஷெல் கேஸ் திட்டத்திற்காக நிலத்தில் பெரிய அளவு துளையிடுவதால், நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளதா?, நிலத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது குறித்தும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. மேலும், டெல்டா பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்து, 4 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் குழுவிற்கு அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் பின்வருமாறு : தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் இந்துமதி எம்.நம்பி, மகேஷ்வரி, திருச்சி மண்டல நீர்வள தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, டிட்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உட்பட 6 பேர், இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications