தொழிற்சாலை வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம்.. பணியாளர்கள் பைக்கில் செல்ல அனுமதியில்லை - தமிழக அரசு
சென்னை: மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் தொழிற்சாலைக்கு இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் நாளை முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் பூத், மருந்தகம் தவிர காய்கறி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறி இருந்தது.
இந்த நிலையில் இந்த அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்கள் கட்டாயம் இ-பதிவு செய்ய வேண்டும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்ய வேண்டும். மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் தொழிற்சாலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications