பொங்கல் பரிசு தொகுப்பு.. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பு
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் முழுவீச்சில் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

டோக்கன் முறையில் விநியோகம்
இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் வழங்கப்படும் தேதி குறிப்பிடபட்டு இருக்கும். அந்த நாளில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம். தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலேயே டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஜனவரி 31-ம் தேதி வரை வாங்கி கொள்ளலாம்
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஜனவரி 31-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் வேறு நாளில் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சில பொருட்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டு
தேதி நீட்டிப்பு செய்யப்பட்டதன் மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று அவர் கூறினார். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும்போது இந்த 21 பொருட்களில் சில பொருட்களை வழங்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும். இதில் தவறு செய்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications