நல்லகண்ணு, வைகோ. தினகரன், பிரேமலதா உட்பட 13 தலைவர்கள் மீதான 38 ஸ்டெர்லைட் வழக்குகள் ரத்து
சென்னை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான நல்லகண்ணு, வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட 13 பேர் மீதான 38 ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஸ்டாலின், 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்கள்.
1. திரு.ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
2. திரு.வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
3. திரு.கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
4. திரு. டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
5. திருமதி பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
6. திரு. எல்.கே.சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
7. திரு.அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தற்போது மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம்) , தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் (தெற்கு), திராவிட முன்னேற்றக் கழகம்
8. திரு.அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
9. திரு. ராஜா, மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
10. திரு.ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
11. திருமதி பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்
12. திரு.ஆர்தர் மச்சோடா, துணைச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி.
13. திரு.பாலசிங், ஒன்றியச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications