தைரியம் இருக்கே.. அதனால்தான் பாஜக தனித்து போட்டி.. மந்தைவெளியில் வாக்களித்த குஷ்பு!
சென்னை: தைரியம் இருப்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இன்றைய தினம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஆனால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடுகிறது.

விறுவிறு வாக்குப் பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காலை முதலே விறுவிறுப்பாக மக்கள் வாக்களிக்க வருகை தருகிறார்கள். திரைப் பிரபலங்களும் வந்து செல்கிறார்கள். ஒவ்வொருவரும் மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்குப் பதிவை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறார்கள்.

மந்தைவெளியில் குஷ்பு
இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு வந்திருந்தார். அவர் வாக்களித்து விட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வீட்டிலேயே இருந்துவிடாமல் அனைவரும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.

தைரியம் இருப்பதால்தான் தனித்து போட்டி
வெற்றி பெறுவோம் என்ற தைரியம் இருப்பதால்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது என குஷ்பு தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவைகளில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

மேயர் பதவி
இந்த நிலையில் இந்த நகர்ப்புற தேர்தலில் மேயர் பதவிகளையும், நிறைய இடங்களையும் பாஜக கேட்டு அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய அளவில் அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி தொடரும் என்றே அறிவிக்கப்பட்டது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி முறிவு
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது என விமர்சனங்கள் எழுந்தன. தற்போது பாஜக தனித்து போட்டியிடுவதால் அக்கட்சிக்கு மக்களிடையே இருக்கும் உண்மையான செல்வாக்கு இந்த தேர்தலில் வெளிப்பட்டுவிடும் என்றே சொல்லப்படுகிறது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்தும் ஒரு வாக்கை பெற்றதாக விமர்சிக்கப்பட்ட பாஜக இந்த முறை எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications