Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனம் மாறுமா? பொங்கல் அன்று நடக்கும் யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்ற அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் நாளில் நடத்தப்படும் UGC NET தேர்வை வேறு தேதிகளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியுள்ளார்.

கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாற்றும் டிசம்பர் என இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 85 பாடங்களுக்கு வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ugc tamil nadu pongal 2025

பொங்கல் அன்று நெட் தேர்வு

தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் கொண்டப்படும் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யுஜிசி - நெட் தேர்வை பொங்கல் திருநாள் நாட்களில் நடத்தப்படுவதை மாற்றியமைக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்ததில், "ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் UGC - NET தேர்வை 3 ஜனவரி 2025 முதல் 16 ஜனவரி 2025 வரை நடத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் விழா பொங்கல் திருநாள். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அமைச்சர் கடிதம்

2025ஆம் ஆண்டில் 13 ஆம் தேதி போகி பண்டிகையும், 14 ஆம் தேதி பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) பண்டிகையும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்), ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் / காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு நாட்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே 2025 ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல. 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளம்.

பொங்கல் - தமிழர்களின் பாரம்பரிய அடையாளம்

பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணாக்கர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும்.

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025க்கான பட்டயக் கணக்காளர்கள் அறக்கட்டளைத் தேர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

தேதியை மாற்ற வலுக்கும் கோரிக்கை

பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பொங்கல் நாளன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், மதுரை எம்.பி சு.வெங்கேடசனும், இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+