அனைத்துப் பள்ளிகளிலும்.. ஒவ்வொரு 2வது வாரமும்.. ‘வாவ்’ - அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் 'சிறார் திரைப்பட விழா' நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் சரிவர இயங்காமல் இருந்த நிலையில், கொரோனா படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் முடிவடைந்தன.
இதனையடுத்து நடப்புக் கல்வி ஆண்டு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேற்படுத்தும் வகையில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என தமிழக அரசு அறிவி த்துள்ளது.

சார்லி சாப்ளினை தெரியவில்லை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்குத் தெரிந்த ஒரு பெயர் எதுவாக இருக்கக் கூடும்? சார்லி சாப்ளின்? அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவனிடம் கேட்டபோது, சார்லி சாப்ளினை அவனுக்குத் தெரியவில்லை. இன்றைய குழந்தைகளுக்குப் பிடித்தமான மிஸ்டர் பீன்? அவரையும் தெரியவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள சிறார்களிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாலே அவர்கள் சர்வசாதாரணமாக இந்தப் பெயர்களை உச்சரிப்பதைப் பார்க்கலாம். நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறை
மாறாக இணைய வசதி இல்லாத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமொன்றில் வாழும் சிறார்களுக்கு ஓடிடி குறித்தெல்லாம் தெரிவதில்லை. குழந்தைகள் பார்ப்பதற்கென்று தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டாமா? தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இப்படி யோசித்ததன் விளைவுதான் இன்று சிறார் திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ளது. கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப் புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதும்தான்.

சிறார் திரைப்பட விழா
கலை, பண்பாடு சார்ந்து கற்பித்தலும் கற்றலும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். தொழில்முறை கலைஞர்களாகவும் பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில் வகுத்துள்ளது.

மாதத்தில் இரண்டாவது வாரம்
அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவர்களுடைய சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. காட்சி ஊடகத்தின் வாயிலாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை காண வைப்பதும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம்.

தனி பாடவேளை
இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆசிரியர் மூலமாக 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் இப்பொறுப்பு வழங்கப்படும். திரையிடுதலுக்குத் தேவையான உபகரணங்கள் பள்ளியில் இல்லாவிட்டால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வெளியிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

உரையாடல்
திரையிடுதலுக்கு முன்பாகவே பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிறார் திரைப்பட விழாவின் நோக்கங்கள் குறித்தும் திரையிடப்படும் படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கதை வெளிப்பட்டுவிடாமல் மாணவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தி படம் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவார்கள். திரைப்படம் முடிந்தபின்னர், அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்வும் நடத்தப்படும். பின்னூட்டக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதன்மூலம் மாணவர்களின் கருத்துகள் அறியப்படும்.

பரிசுகள்
5 மாணவர்களை இத்திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்களுக்குப் பேசவைக்கப்படுவார்கள். மாணவர்கள் திரைப்படம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுதி அளிக்கலாம் அல்லது வரைந்தும் அளிக்கலாம். ஏதேனும் ஒரு காட்சியை அல்லது உரையாடலை நடித்தும் இயக்கியும் காட்டலாம். திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும். மேலும் திரையிடப்பட்ட படத்திற்கு இரண்டாம் பாகம் என ஒன்று இருந்தால், அது எப்படி இருக்கக்கூடும் என்பதை குழந்தைகளை அவர்களின் கற்பனைகொண்டு எழுத வைக்கப்படுவார்கள்.

ஸ்பாட்லைட்
கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், கதை நடக்குமிடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் 'ஸ்பாட்லைட்' என்ற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிக்கும் ஒருவருக்கும் அணி ஒன்றுக்கும் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

வெளிநாட்டுக்கு சுற்றுலா
ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர். சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு, மாநில அளவில் ஒரு வாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

சில்வர் ஸ்க்ரீன் ஆப்
இச்செயல் பாட்டுக்கென 'சில்வர் ஸ்க்ரீன் ஆப்' என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும். திரையிடல் முடிந்த நாளிலேயே அதற்கான பின்னூட்டங்கள் செயலி வழியாக பதிவேற்றம் செய்யப்படும். திரைப்படங்கள் குறித்த விமர்சனப் பார்வையை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும் என்பதே இத்திரையிடலின் நோக்கம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications