சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.. நாளை முதல் மீண்டும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மக்கள் வெளியே வராத நிலையில் மீண்டும் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். அதில், தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனால் புயலாக மாற வாய்ப்பில்லை.

 நாளை மீண்டும்

நாளை மீண்டும்

இதனால் நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும். 19-20 தேதிகளில் தமிழகம் முழுக்க மழை பெய்ய வாய்ப்பு. மிதமான மழையாக தொடங்கி கனமழையாக மாறும்.

 வட கடலோரம்

வட கடலோரம்

இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். முதலில் வடகடலோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கும். வடகடலோர மாவட்டங்களில் இன்று மாலையே கனமழை தொடங்கும்.

 சென்னை எப்படி

சென்னை எப்படி

21ம் தேதி மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். இன்று சென்னையில் மிதமான மழை பெய்யும். நாளை மாலையில் இருந்து இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார்.

English summary
TN will face fresh heavy rain after Gaja Storm says Chennai Weather Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X