தமிழகத்தில் பி.இ, பிடெக், பிஆர்க் பொறியியல் படிக்க 1,99,213 பேர் விண்ணப்பம் - ஜூலை 27 கடைசி நாள்
தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்காக 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பிற்காக 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 27ம் தேதி ஆகும்.
தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாததை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு, சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவிகள்
அதன்படி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினத்தில் இருந்தே பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு எண்ணிக்கை உயரத் தொடங்கியது. அதற்கு முந்தைய நாட்கள் வரை தினமும் 1,000 பேர் பதிவு செய்து வந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 300க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நேற்றைய தினம் 3,800க்கும் மேற்பட்டோரும் விண்ணப்பப்பதிவு செய்திருக்கின்றனர்.

2 லட்சம் பேர் விண்ணப்பம்
அந்த வகையில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 1,99, 213 பேர் விண்ணப்பப்பதிவை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும், அதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கலந்தாய்வு எப்போது?
ஜூலை 27ஆம் தேதியன்று மாணவர்கள் விண்ணப்பம் செய்வது நிறைவந்த பின்னர் ரேண்டம் எண் வெளியிடப்படும். அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரி
இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பப்பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 27ம் தேதி ஆகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications