அரசு வேலை.. போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. குரூப் 1 தேர்வு தேதியை அறிவித்தது TNPSC

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலியாக உள்ள குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

TNPSC issued Group 1 exam notification to fill the vacant posts

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-I (குரூப்-1 சேவைகள்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகி, 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. குரூப் 1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த மாச்ர் 7ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், மீண்டும் குரூப் 1 தேர்வை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+