ரயிலில் தட்கல் கன்ஃபார்ம் டிக்கெட் புக் பண்ண.. இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க.. ஈஸியா கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் டிக்கெட் கிடைத்துவிட்டால் எதையோ சாதித்தது போன்ற ஒரு பெரிய மகிழ்ச்சி பலருக்கும் இருக்கும். காரணம் அந்த அளவுக்கு ரயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. சாதாரண புக்கிங்கே இந்த நிலை என்றால் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதை பற்றி சொல்லவே வேண்டாம். தட்கல் டிக்கெட் புக் பண்றதுக்கு சில ஈசி டெக்னிக்குகளை இங்கே பார்க்கலாம்.

நமது நாட்டில் பயணிகள் தங்கள் போக்குவரத்து தேவைக்கு பெரிதும் சார்ந்து இருப்பது ரயிலைத்தான். குறிப்பாக தொலை தூர பயணங்களுக்கு செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என்று பார்த்து விட்டுத்தான் பிற ஆப்ஷன்களை தேர்வு செய்வோம். ரயில்களை பொறுத்தவரை மலிவான கட்டணம் என்பதோடு பாதுகாப்பான பயணம் எனவும் சொல்லலாம்.

To book tatkal conform ticket in train, follow these tips, there is a high chance of getting ticket

முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் அதிகம் ரயில்களைத்தான் நாடுவார்கள். சாலை வழி பயணத்துடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் களைப்பு இன்றி ரயில்களில் பயணம் செய்து விடலாம். எனவே ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதத்தான் செய்யும். அதுவும் இந்த சம்மர் காலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்கிறார்கள்.

இதனால் பேருந்து, ரயில்களில் டிக்கெட்டுகள் புக் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரயில்களை பொறுத்தவரை கடைசி நேரத்தில் முடிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்காக தட்கல் முறையில் டிக்கெட் செய்யும் வசதி உள்ளது. பயணம் செய்யும் தேதிக்கு முந்தைய நாள் தட்கலில் புக் செய்து விடலாம். ஆனால், இந்த தட்கலில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்து விட்டால் ஏதோ ஒரு சாதனை செய்து விட்டோம் என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அந்த அளவுக்கு பயணிகள் தட்கல் புக்கிங் செய்வதிலும் முண்டியடிப்பதால் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைப்பது இல்லை. வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் வேறு பஸ் பக்கம் தான் போக வேண்டியுள்ளது. தட்கலில் டிக்கெட் புக் செய்வதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் டிக்கெட்டுகள் கிடைக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரை நேரடியாக கவுண்டரில் போய் எடுக்கலாம். ஐ.ஆர்.சி.டிசி.இணையதளம், ஐஆர்.சி.டி.சி மொபைல் ஆப் மூலமாகவும் புக் செய்ய முடியும். ஏசி கோச்க்களுக்கு காலை 10 மணிக்கு புக்கிங் தொடங்கும். சாதாரண ஸ்லீப்பர் கோச்களுக்கு 11 மணிக்கு தொடங்கும். எனினும் அடுத்த சில நிமிடங்களில் பெரும்பாலான ரயில்களில் தட்கல் புக்கிங்கும் காலியாகிவிடும்.

  • தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும் என்றால் தட்கல் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே லாக் இன் செய்து தயார் நிலையில் இருப்பது நல்லது. பயணம் செய்பவரின் பெயர், எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரங்களை நுனி விரலில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்யும் போது ஒரு நொடி கூட வீணடிக்காமல் கேட்கப்படும் தகவல்களை உடனடியாக கொடுக்க முடியும்.
  • உங்களிடம் கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்போன் என்ற பல சாதனங்கள் இருந்தால் அனைத்திலும் புக்கிங் செய்ய முயற்சி செய்யுங்கள். இதனால், கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் கிடைக்க அதிக வாயுப்புகள் உள்ளது. அதேவேளையில் வேகமாகவும் புக் செய்ய முடியும்.
  • ஒரே வழித்தடத்தில் பல ரயில்கள் செல்லும். அதில் பயணிகள் அதிகம் முன்னுரிமை கொடுக்காத சில ரயில்களும் இருக்கும். அதை தேர்வு செய்து புக்கிங் செய்ய முயற்சி செய்யுங்கள். எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்கிறீர்கள் என்றால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் உள்ளன.
  • இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கவே பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சூப்பர் பாஸ்ட் என்பதால் பயணிகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. எனவே, பயணிகள் இரண்டாவது ஆப்ஷனாக வைத்திருக்கும் ரயில்களை குறிவைத்து புக் செய்யலாம்.
  • டிக்கெட் புக் செய்யும் போது லோயர் பெர்த் முன்னுரிமை கொடுத்து புக் செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் லோயர் பெர்த்கள் பொதுவாக வயதான பயணிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே, லோயர் பெர்த்தில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு சற்று அதிகம் உள்ளது.
  • இணையவசதி அதிவேகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் பேமேண்ட் உள்ளிட்டவற்றை விரைவாக செய்து டிக்கெட் கிடைப்பதை எளிதில் உறுதி செய்ய முடியும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+