இன்று வெளியிடப்பட்ட பட்ஜெட் ஒரு "டிஜிட்டல் டிமிக்கி"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
சென்னை : இன்று நிதியமைச்சர் வெளியிட்ட டிஜிட்டல் பட்ஜெட் ஆனது டிஜிட்டல் டிமிக்கி ஆகவே பார்க்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்று கூறியிருந்தார்கள்.யானைப்பசிக்கு சோளபொறிபோல 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறாராகள்.இது மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கூறியிருந்தது. கல்விக்கடன் அனைத்தையும் நாங்கள் ரத்து செய்வோம் என்றும் பெட்ரோல் டீசல் விலை முறையே 5ரூபாய் மற்றும் 4 ரூபாய் குறைப்போம் என்றும் கூறி இருந்தார்கள். முதியோர்களுக்கான ஓய்வூதிய தொகை 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்கூறியிருந்தார்கள்.

மாதம் 1000
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்கள். இந்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாமல் இருப்பதற்காகவே வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார் .

பேருந்து கட்டணம்
வெள்ளை அறிக்கை வெறும் வெற்று அறிக்கை என்று கூறிய அவர், மின் கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை, பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை, சொத்து வரியை ஏன் கூட்டவில்லை என்று கடந்த ஆட்சியை கேள்வி கேட்கும் விதமாக அவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தற்போது மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி ஆகியவை உயரப் போகிறது என வெள்ளை அறிக்கையின் மூலம் மக்களுக்கு கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை
இன்று நிதியமைச்சர் வெளியிட்ட டிஜிட்டல் பட்ஜெட் ஆனது டிஜிட்டல் டிமிக்கி ஆகவே பார்க்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்று கூறியிருந்தார்கள்.யானைப்பசிக்கு சோளபொறிபோல 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறாராகள்.இது மக்களை ஏமாற்றும் செயல் .

ஏமாற்றம்
நீட் தேர்வில் அதிமுக அரசு தெளிவான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. அதிமுகவின் தொலை நோக்கு பார்வையாக முழுமையாக நீட்தேர்வில் இருந்து விலக்கு பெருவதாகத்தான் இருந்தது. நீட் தேர்வில் விலக்கு பெரும் வரை மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியிலேயே அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். தற்போது திமுக நீட் தேர்வில் மாணவர்களை குழப்பமடைய செய்துவிட்டது. நீட் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகமல் போனதற்கு காரணம் திமுக ஆட்சிதான்,திமுகவால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது.

அதிமுகு கொடுத்தது
கொரோனா காலத்தில் வெரும் 4,000 ரூபாயை மக்களுக்கு கொடுத்து விட்டு.பெரிதாக திமுக அரசு பேசிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு சொல்லாததையும் செய்து இருக்கிறது. என்ற கூறிய அவர் நிதி அமைச்சரின் பேச்சு தெளிவாக இல்லை எனவும் பட்டவர் தனமாக இல்லை.

திமுக அரசு
1996-2001 திமுக அரசு கஜானாவை காலி செய்தது. அம்மா அரசு வந்த பிறகு தான் கஜானா நிரப்பப்பட்டது . 1996 லிருந்து நிதிநிலை அறிக்கையை வெளிப்படையாக கூறியிருக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருப்பதாலே கடன் வழங்கப்பட்டது. அதிமுக அரசு பொருளாதார ரீதியிலாக தமிழகத்தை வலுப்படுத்தி உள்ளது என்பது தான் உண்மை . சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கொண்டுவந்தது திமுக தான் அதனால் நமது சில்லறை வியாபாரம் செய்யும் வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு விட்டனர்" இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications