சென்னையில் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து... பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்..!
சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கந்தன்சாவடியை அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தால் தயாரிப்புகள், இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு தீயணைப்புத்துறையினர் செல்வதற்குள் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் நாசமாகியது. இதனிடையே 3 மணி நேரமாக போராடி தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து காரணமாக காரப்பாக்கம் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் மின்சாரம் கசிவா அல்லது மர்மநபர்களின் சதிச்செயலா என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. பொதுவாக தொழிற்சாலைகளில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்பட்டிருக்கும். இது போன்று இந்த தொழிற்சாலையில் செய்யப்பட்டிருந்ததா என்பது பற்றியும் போலீஸ் விசாரித்து வருகிறது.
தீ முழுவதும் அணைக்கப்பட்டுள்ள நிலையில் சேதம் குறித்து மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தீயில் கருகி எரிந்த பொருட்களின் மதிப்பு பல கோடிகளில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications