மாறாத ஷாக்! கோயம்பேடு சந்தையில் தக்காளி, சின்னவெங்காயம் விலையால் அலறும் மக்கள்! எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றின் விலை என்பது மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடர்ந்து வரும் நிலைில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அடிக்கடி வெங்காயத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவென உயர்ந்து அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்கும். அந்த வரிசையில் தான் கடந்த சில நாட்களாக இணைந்துள்ளது.

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளி விலை விண்ணை முட்டியது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை ரூ.200யை கூட தொட்டது.
இதனால் மாத பட்ஜெட்டில் தக்காளிக்கு என்றே தனியாக பணம் ஒதுக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். மேலும் பலர் தக்காளியை சமையலில் சேர்ப்பதை குறைத்து கொண்டனர். இந்த விலையேற்றம் உடனடியாக முடிவுக்கு வரும் என எண்ணிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விலை குறையாமல் 3 இலக்கத்திலேயே விற்பனையாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி உள்பட காய்கறிகளின் விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி கோயம்போடு மார்க்கெட்டில் நேற்று காலையில் தக்காளி ரூ.130க்கு விற்பனையான நிலையில் மாலையில் ரூ.120க்கு விற்றது. தற்போதும் அதே விலை தொடர்கிறது. இதன்மூலம் நவீன் தக்காளி விலையில் மாற்றம் இன்றி ரூ.120க்கு விற்பனையாகிறது. மற்றொரு ரக தக்காளி ரூ.110க்கு விற்பனையாகிறது.
அதேபோல் சின்ன வெங்காயம் ரூ.180க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.200யை கடந்த சின்ன வெங்காயம் தற்போது சற்று விலை குறைந்துள்ளது. இருப்பினும் அதன் விலை என்பது இன்னும் கண்ணீர் வரவழைக்கும் வகையில் தான் உள்ளது. இதனால் பொதுமக்களின் பட்ஜெட் கையை கடிக்கிறது. மாறாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது.
இதுதவிர இஞ்சி கிலோ ரூ.230க்கும், பூண்டு கிலோ ரூ.210க்கும் விற்பனையாகிறது. உருளை கிலோ ரூ.30, பீன்ஸ் ரூ.90, ஊட்டி கேரட் ரூ.65, பெங்களூர் கேரட் ரூ.40, வண்ண குடைமிளகாய் ரூ.200, பட்டாணி ரூ.190, பச்சை குடைமிளகாய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications