தொடர்ந்து சரிந்த தக்காளிக்கு பிரேக்! இன்று காய்கறிகள் விலை எவ்வளவு? இதோ கோயம்பேடு சந்தை நிலவரம்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்ந்து சரிந்து வந்த தக்காளி விலைக்கு இன்று திடீரென்று பிரேக் விழுந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி உள்பட காய்கறிகளின் முழு விலை பட்டியல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு வெங்காயத்தின் விலை என்பது திடீரென்று உச்சம் தொடும். ஆனால் இந்த ஆண்டு வெங்காயத்துக்கு பதில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பல இடங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.200யை கடந்து விற்பனையானது.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் தக்காளி விலை என்பது ரூ.150யை கடந்து மக்களை மிரட்டியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தக்காளி பயன்பாட்டை குறைக்க தொடங்கினர்.
இந்த விலையேற்றத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் தமிழ்நாட்டில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தக்காளி விலை என்பது தொடர்ந்து சரிந்து வருகிறது. கிலோ ரூ.150க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்பது தக்காளியின் வரத்து அதிகரித்து இருப்பது தான் என கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிலோவுக்கு ரூ.10, ரூ.20 என்ற மளமளவென தக்காளி விலை குறைந்து வந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனையானது. இத்தகைய சூழலில் இன்றும சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படு்ம காய்கறிகளின் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி தக்காளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதாவது தொடர்ந்து விலை குறைந்த தக்காளி விலைக்கு இன்று பிரேக் விழுந்துள்ளது. அதன்படி நேற்றைய தினத்தை போலவே ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன் தக்காளி ரூ.100க்கு விற்பனையாகிறது.
இதுதவிர வெங்காயம் கிலோ ரூ.22, உருளை ரூ.33, சின்ன வெங்காயம் ரூ.80, ஊட்டி கேரட் ரூ.65, பீன்ஸ் ரூ.50, ஊட்டி பீட்ரூட் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.44, முருங்கை ரூ.30, காலி பிளவர் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பச்சை மிளகாய் கிலோ ரூ.55, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.210, பூண்டு ரூ.200, பச்சை குடைமிளகாய் ரூ.100, வண்ண குடை மிளகாய் ரூ.160, தேங்காய் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications