அடடா.. விலை குறைந்த தக்காளி திடீர் பிரேக்! கோயம்பேட்டில் இன்று எவ்வளவு? காய்கறிகளின் ‛ரேட்’ லிஸ்ட்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் மளமளவென தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீர் பிரேக் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி உள்பட காய்கறிகளின் முழு விலை பட்டியல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலைகள் யாரும் எதிர்பாராத வகையில் அதிகரிக்க தொடங்கியது. வழக்கமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும். ஆனால் இந்த முறை தக்காளி விலை வீர்ரென உயர்ந்து உச்சம் தொட்டது.

பல இடங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.200யை கடந்து விற்பனையானது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் தக்காளி விலை என்பது ரூ.150யை கடந்து மக்களை மிரட்டியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தக்காளி பயன்பாட்டை குறைக்க தொடங்கினர்.
இதற்கிடையே தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் தக்காளி விலை என்பது சரிந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.150யை கடந்து விற்பனையாகி வந்தது. நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.30ம், நேற்று கிலோவுக்கு ரூ.20ம் குறைந்து ரூ.100க்கு விற்பனையானது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் தொடர்ந்து விலை குறைந்த தக்காளி விலைக்கு இன்று பிரேக் விழுந்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றம் இல்லை. நேற்றைய தினம் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையானது. அதேபோல் இன்றும் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன் தக்காளி ரூ.120க்கு விற்பனையாகிறது.
இருப்பினும் இஞ்சி, பூண்டு, பட்டாணி உள்ளிட்டவற்றின் விலை என்பது உச்சத்தில் உள்ளது. அதன்படி இஞ்சி கிலோ ரூ.210, பூண்டு ரூ.200, பட்டாணி ரூ.200, வண்ண குடமிளகாய் ரூ.180, பீன்ஸ், மாங்காய் தலா ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.80, பச்சை குடைமிளகாய் வாழைதண்டு ரூ.60க்கும் விற்பனை செ்ய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் ரூ.22க்கு விற்கிறது.
இதுதவிர ஊட்டி கேரட் கிலோ ரூ.60, காரமணி ரூ.50, சேமங்கிழங்கு, பாவக்காய், அவரைக்காய், எலுமிச்சை உள்ளிட்டவை தலா ரூ.40, ஊட்டி பீட்ரூட் ரூ.38, வெண்டைக்காய் ரூ.35, உருளை ரூ.32, உஜாலா கத்தரி, வரி கத்தரி உள்ளிட்டவை தலா ரூ.30, தேங்காய் ரூ.27, கர்நாடகா பீட்ரூட் ரூ.26, கொத்தவரங்காய் ரூ.25க்கு விற்பனையாகிறது.
மேலும் பெங்களூர் கேரட், சவ்சவ், முட்டைகோஸ், புடலங்காய், சுரக்காய், கருவேப்பிலை, நூக்கள், வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி உள்ளிட்டவை ரூ.20, கோவைக்காய் ரூ.18, வெள்ளரி, முள்ளங்கி தலா ரூ.15, வாழைக்காய் ரூ.8, கீரை வகைகள் ரூ.6க்கும், புதினா ரூ.3க்கும், கொத்தமல்லி ரூ.2க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications