நல்ல செய்தி.. சென்னை கோயம்பேட்டில் குறைந்த தக்காளி! காய்கறிகளின் இன்றைய முழு விலை பட்டியல் இதோ!
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. நேற்றைய தினத்தைவிட ரூ.10 குறைந்ததால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பிற காய்கறிகளின் இன்றை விலை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து திடீரென உச்சம் தொட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200யை கூட கடந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

அதன்பிறகு சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் தக்காளி விலை என்பது உச்சத்தில் தான் உள்ளது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பிரச்சனையை எதிர்கொண்டனர். மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழ்நாட்டில் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று தக்காளியின் விலை குறைந்துள்ளது. அதாவது நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று தக்காளியின் விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது. இது சாதாரண தக்காளியின் விலையாகும். அதேவேளையில் நவீன் தக்காளி கிலோ ரூ.160க்கு விற்பனையாகிறது.

இந்த தக்காளியின் விலை குறைவு என்பது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது. இருப்பினும் வேறு சில காய்கறிகளின் விலை என்பது தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. அதன்படி இஞ்சி கிலோ ரூ.210க்கும், பூண்டு கிலோ ரூ.210க்கும், பட்டாணி கிலோ ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வண்ண குடமிளகாய் ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100க்கும், சின்ன வெங்காயம் ரூ.90க்கும், அவரைக்காய், பச்சை குடமிளகாய், வாழைத்தண்டு உள்ளிட்டவை தலா ரூ.60க்கும் விற்பனையாகிறது.
எலுமிச்சை, பீர்க்கங்காய், ஊட்டி கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்டவை கிலா ரூ.50க்கும், காராமணி, பாகற்காய், சேனைக்கிழங்கு கிலோ ரூ.45க்கும், உஜாலா கத்தரிக்காய், வரி கத்தரி, சேமங்கிழங்கு உள்ளிட்டவை கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. ஊட்டி பீட்ரூட் ரூ.38 க்கும், முருங்கை, வெண்டை ரூ.35க்கும், உருளை ரூ.32க்கும், காலிபிளவர் ரூ.30க்கும், கர்நாடகா பீட்ரூட், தேங்காய் ரூ.27 க்கும், வெங்காயம் ரூ.24க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும், முள்ளங்கி ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications