Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ப அதிர்ச்சி! மீண்டும் பொத்தென விழுந்த தக்காளி விலை! கோயம்பேடு சந்தை காய்கறிகளின் ‛ரேட்’ நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று மீண்டும் மளமளவென குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு ரூ.20 சரிந்த நிலையில் பிற காய்கறிகளின் விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் தக்காளியின் விலை என்பது மளமளவென உயர்ந்தது. பொதுவாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கண்ணீரை வரவழைக்கும் நிலையில் கடந்த மாதம் முதல் தக்காளி என்பது விலை உயர்ந்து சிகப்பு தங்கமாக மாறிப்போனது.

Tomatoe price today reduced Rs.20 per kg at Koyambed Market in Chennai and other vegetables price list revealed

இந்தியாவில் பல இடங்களில் கிலோ ரூ.200யை கடந்தது. தமிழ்நாட்டில் ரூ.150யை தாண்டி ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த விலை உயர்வு தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததும், அதிக வெப்பத்தால் தக்காளி உற்பத்தி சரிந்ததும், மழை வெள்ளத்தில் தக்காளி அழிந்ததும் தான் காரணமாக கூறப்படுகிறது.

இந்த தக்காளி விலை உயர்வால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். காய்கறிகளுக்காக அவர்கள் ஒதுக்கிய மாதாந்திர பட்ஜெட்டில் தக்காளிக்கே அதிக செலவு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் பலரும் தக்காளி பயன்பாட்டை குறைக்க தொடங்கினர்.

மேலும் தக்காளி விலை உயர்வை சமாளிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை தொடங்கியது. சில இடங்களில் தோட்டக்கலைத்துறை சார்பிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கிடையே தான் தற்போது கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை என்பது சற்று குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை என்பது மளமளவென குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.130க்கு விற்பனையாகி வந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிப்பால் தக்காளியின் விலை என்பது சரிந்துள்ளது.

மேலும் இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவீன் தக்காளி கிலா ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த சின்னவெங்காயத்தின் விலையும் இன்று சரிந்துள்ளது. நேற்று கிலோ ரூ.80க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று ரூ.70க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.22க்கு விற்பனையாகிறது.

மேலும் உருளை கிலோ ரூ.33, ஊட்டி கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.40, ஊட்டி பீட்ரூட் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.44, முருங்கைக்காய் ரூ.30, காலிபிளவர் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.50, பட்டாணி ரூ.180, இஞ்சி ரூ.210, பூண்டு ரூ.200, பச்சை குடைமிளகாய் ரூ.50, வண்ண குடைமிளகாய் ரூ.160, தேங்காய் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+