நேற்று ரூ.30.. இன்று ரூ.20.. தொடர்ந்து சரியும் தக்காளி! சென்னை மார்க்கெட் காய்கறிகளின் விலை இதோ!
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.30 குறைந்து நிலையில் இன்று மேலும் ரூ.20 சரிந்துள்ளது. வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து சரியும் தக்காளி விலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலைகள் வீர்ரென அதிகரித்தன. குறிப்பாக தக்காளியின் விலை உயர்வு என்பது உச்சம் தொட்டது. பல இடங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.200யை கடந்து விற்பனையாகி வருகிறது.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் தக்காளி விலை என்பது ரூ.150யை கடந்து மக்களை மிரட்டியது. இதற்கு தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததும், அதிக வெப்பத்தால் தக்காளி உற்பத்தி சரிந்தது தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்த எதிர்பாராத தக்காளி விலை உயர்வால் ஏழைகள் முதல் பணக்காரர்கார்கள் வரை தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டனர். ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னிகள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்த தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் தக்காளி விலை என்பது சரிந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை இன்றும் மளமளவென சரிந்துள்ளது. அதாவது நேற்று கிலோவுக்கு ரூ.30 குறைந்து தக்காளி ரூ.120க்கு விற்பனையான நிலையில் இன்று மேலும் ரூ.20 குறைந்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று சாதாரண தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுதவிர சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நவீன் தக்காளி ரூ.110க்கும், வெங்காயம் ரூ.22க்கும், உருளை ரூ.32க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், ஊட்டி கேரட் ரூ.60க்கும், வெண்டைக்காய் ரூ.35க்கும், பச்சை மிளகாய் ரூ.45க்கும், பீன்ஸ் ரூ.90க்கும், இஞ்சி ரூ.210க்கும், பூண்டு ரூ.200க்கும், தேங்காய் ரூ.27 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications