சுற்றுலா படிப்பு.. உலகம் முழுவதும் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. எங்கு படிக்கலாம்?
சென்னை: இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் சுற்றுலாத் துறையை நம்பி மட்டுமே ஏராளமான நகரங்கள் இருக்கின்றன. அதேபோல் இந்தியாவில் ஆன்மீகம், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், வரலாற்று சின்னங்கள், திருவிழாக்கள், இயற்கை எழில்கொஞ்சும் அதிசயங்கள் என்று ஏராளமான பகுதிகள் உள்ளன.
சுற்றுலாத் துறை
அதேபோல் சம காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு சிறிய பயணமாவது மேற்கொள்ள வேண்டும் என்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். வரும் காலங்களில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவை பார்க்க வெளிநாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

சுற்றுலா படிப்புகள்
அந்த வகையில் சுற்றுலா செல்வோரையும், இந்தியாவுக்கு சுற்றுலா வருவோரையும் வழிகாட்ட அதிகளவிலான நிறுவனங்களும், மனிதவளமும் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத் துறை தொடர்பான படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டிகிடி, சான்றிதழ் படிப்புகள்
பி.ஏ அல்லது பிஎஸ்சி சுற்றுலா மற்றும் சுற்றுலா மேலாண்மை, பிபிஏ டூரிஸம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், எம்.ஏம் அல்லது எம்.எஸ்சி டூரிஸம் நிர்வாகம், எம்பிஏ டூரிஸம், பிஜி டிப்ளமோ, டூரிஸ்ட் கைடு-க்கான சான்றிதழ் படிப்புகள், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்று ஏராளமான படிப்புகள் இருக்கின்றன.
வேலைவாய்ப்பு எப்படி?
இந்த படிப்பு முடித்த பின் டிராவல் கன்சல்டன்ட், டூர் ஆபரேட்டர், ஹோட்டல் மேனேஜர், ஏர்லைன் நிர்வாகி, ஈவண்ட் மேனேஜர், டூரிஸம் மார்க்கெட்டிங் மேனேஜர், டெஸ்டினேஷன் பிளானர். டிராவல் பிளாக்கர், அரசு சுற்றுலா அலுவலர் என்று ஏராளமான பணி வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதேபோல் இந்த படிப்பு முடித்தவர்களுக்கு டிராவல் ஏஜென்சி, ஹோட்டல்ஸ், ரிசார்ட்ஸ், ஏர்லைன்ஸ், க்ரூஸ் லைன்ஸ், அரசு சுற்றுலாத் துறை என்று ஏராளமான நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
இந்த படிப்பில் இணைவதற்கு 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எந்த குரூப் எடுத்திருந்தாலும் இந்த படிப்பில் இணைவதற்கு பிரச்சனை இல்லை. இந்தியாவில் சுற்றுலா படிப்புக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இணைந்து படிக்கலாம்.












Click it and Unblock the Notifications