தங்கம் அதிகம் இருப்பு வைத்திருக்கும் நாடுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? தெரிஞ்சுக்கோங்க
சென்னை: தங்கம் விக்கிற விலைக்கு சாமானிய மக்களால் ஒரு சவரன் கூட நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், சில நாடுகள் அதிக அளவு தங்கத்தை வாங்கி குவித்து வைத்திருக்கிறது. இந்த நாடுகளின் லிஸ்ட்டில் இந்தியாவும் உண்டு.
எந்தெந்த நாடுகள் எவ்வளவு தங்கம் இருப்பை வைத்திருக்கின்றன? இந்தியா இந்த பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் தங்கம் இருப்பு
அதன்படி முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இந்நாட்டின் பெடரல் வங்கி (மத்திய வங்கி) சுமார், 8,133 டன் தங்கத்தை சேமித்து வைத்திருக்கிறது. இந்த தங்கத்தை எடுத்து இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கும் சரிசமமாக பங்கிட்டு கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் முக்கால் சவரன் அதாவது தோராயமாக 6.750 கிராம் தங்கம் கிடைக்கும். அந்த அளவுக்கு தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது. இந்த தங்கம் அனைத்தும் கட்டியாக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள்
இரண்டாவது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. இந்நாட்டின் மத்திய வங்கி 3,351 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.35.69 லட்சம் கோடியாகும். நம்முடைய மத்திய அரசு பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கும் நிதியை விட இது அதிகம். தமிழ்நாடு அரசின் ஆண்டு வருமானத்தைவிடவும் இது பல மடங்கு அதிகமாகும். அமெரிக்காவுக்குப் பிறகு ஐரோப்பாவில் அதிக தங்கம் வைத்துள்ள நாடாக ஜெர்மனி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி அதிக அளவுக்கு தங்கத்தை வைத்திருக்கிறது.
இத்தாலி தங்கமும் ககன்யான் திட்டமும்
தமாத்துண்டு நாடாக இத்தாலி இருந்தாலும் சுமார் 2,452 டன் அளவுக்கு தங்கத்தை இந்நாடு கையிருப்பில் வைத்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.26.05 லட்சம் கோடி ஆகும். இவ்வளவு பெரிய நிதியை வைத்து சந்திரயான், ககன்யான் என அடுத்த 50 ஆண்டுகளுக்கான விண்வெளி ஆய்வை நம்மால் செய்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்த தங்கத்தின் மதிப்பு அதிகம்.
அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. 2,437 டன் தங்கத்தை பிரான்ஸ் கையிருப்பில் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.25.90 லட்சம் கோடியாகும். இந்த அளவுக்கு நிதியை வைத்து 200-250 இந்தியாவில் மத்திய பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும். அல்லது எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்க முடியும்.
சீனா வாங்கும் தங்கம்
5வது இடத்தில் சீனா இருக்கிறது. சீனாவில் பெரிய அளவில் தங்கம் முன்பு இருந்தது கிடையாது. இப்போதுதான் அதுவும் கடந்த 10 ஆண்டுகளில்தான் சீனா வேகமாக தங்கத்தை சேர்க்க தொடங்கியிருக்கிறது. இந்நாட்டிடம் தோராயமாக 2,300 டன் அளவுக்கு தங்கம் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.24.44 லட்சம் கோடி. இந்த நிதியை வைத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு மழலை கல்வி தொடங்கி கல்லூரி படிப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கல்வியை கொடுக்க முடியும்.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
தங்கம் அதிகம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் சுவிட்சர்லாந்து இருக்கிறது. இந்நாட்டின் மத்திய வங்கி 1,040 டன் அளவுக்கு தங்கத்தை வைத்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்த நாட்டின் மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், அதிக தங்கம் வைத்திருப்பதாலும் உலகின் மிகவும் பணக்கார நாடு என்கிற பட்டத்தை இந்நாடு பெற்றிருக்கிறது. 1040 டன் தங்கத்தின் மதிப்பு ரூ.14.05 லட்சம் கோடியாகும். இதை வைத்து 3,697 புல்லட் ரயில்களை வாங்க முடியும்.
7வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய ரிசர்வ் வங்கி 800 டன் தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.8.50 லட்சம் கோடி. இதை வைத்து நாடுமுழுவதும் வேளாண் கடனை நம்மால் தள்ளுபடி செய்ய முடியும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் 846 டன், நெதர்லாந்து 612 டன், போலாந்து 515 டன் என தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கின்றன.
-
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
கிழிந்த நோட்டுகளை வங்கியில் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கியின் முக்கிய விதிகள் வெளியீடு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்!












Click it and Unblock the Notifications