சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாறுகிறது "கோலம்".. யார் ரவி பச்சமுத்தா.. அந்த தொகுதிதானாமே.. தூண்டிலை வீசுவது எடப்பாடியா? பாஜகவா?

ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் எம்பி தேர்தலுக்கான வேகம் எதுவும் தென்படாத நிலையில், ஒரு கட்சிக்கு தொகுதியே முடிவாகி விட்டதாம். இதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் தலைவர் பாரிவேந்தர். தான் சார்ந்த உடையார் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அந்த முயற்சி பெருமளவு அவருக்கு கை கொடுக்கவில்லை..

பிறகு, பாஜக, திமுக என்ற மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் களத்தில் போட்டியிட்டார்.. 2019-ல் பெரம்பலூர் எம்பி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று, இப்போது எம்பியாக இருக்கிறார்.

அரவணைக்கும் பாஜக.. அதிமுக எம்பி தம்பித்துரைக்கு புதிய பொறுப்பு.. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு அரவணைக்கும் பாஜக.. அதிமுக எம்பி தம்பித்துரைக்கு புதிய பொறுப்பு.. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

ஆக்டிவ்

ஆக்டிவ்

எம்பியான பிறகு, ஆக்டிவ்வாக இவர் இல்லை என்றும், உடல்நலம் சார்ந்த விஷயங்கள் காரணமாக தொகுதி பக்கம் அவ்வளவாக போக முடியவில்லை என்றும் ஒருசில வருடங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதனிடையே செய்தியாளர்களிடம் ஒருமுறை பாரிவேந்தர் நொந்துபோய் பேசியிருந்தார்.. "அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்து வருத்தப்படுகிறேன்.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை.. திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை.. இனி வரும் எந்த தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது.. இவர்களோடு கூட்டணி வைத்தால் அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்களோடு கூட்டணி வைத்தால் இவர்கள் கோபப்படுகிறார்கள்" என்று கூறியிருந்தார்..

 உதயசூரியன்

உதயசூரியன்

பாரிவேந்தர் இப்படி ஒரு பேட்டியை பார்க்கும்போதே, அவர் யாரை சொல்கிறார் என்ற குழப்பம் ஏற்பட்டது.. காரணம், பாஜக, திமுக இரண்டு கட்சியுடன்தான் கூட்டணியில் இருந்திருக்கிறார்..அப்படி இருக்கும்போது, இந்த நேரத்தில் மனம் நொந்து புலம்புகிறார் என்றால், அது திமுகவாக இருக்குமோ? என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுந்தது.. ஆனால், திமுக கூட்டணியில் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேசவும் இல்லை.. திமுக தொடர்பான பேச்சுக்களையும் அவர் தவிர்த்து வந்தார்..

 கிளியர் ரூட்

கிளியர் ரூட்

பிறகு திடீரென பிரதமர் மோடியை அபாரமாக புகழ ஆரம்பித்துவிட்டார். இவரது மகன் ரவி பச்சைமுத்து, பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோதே நிலவிவந்த சந்தேகங்கள் ஓரளவு கிளியர் ஆக தொடங்கின.. அப்போதும்கூட, ஒருவேளை இது அரசியல் மரியாதையாக இருக்குமோ? திமுக எம்பியாகத்தானே இன்னமும் இவர் இருக்கிறார்?" என்றிருந்த கொஞ்ச நஞ்ச டவுட்டையும் பாரிவேந்தரே அன்றைய தினம் கிளியர் செய்துவிட்டார்.

 மாறும் நிறம்

மாறும் நிறம்

பாரிவேந்தர் அப்போது பேசும்போது, "திராவிட கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கட்சியை தொடங்கினேன்.. ஆனால், குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்.. குடும்ப ஆட்சி என்பது எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் என ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரசு பணத்தை பெறக்கூடிய வகையில் செயல்படக்கூடாது" என்றார்.

 ரவி பச்சமுத்து

ரவி பச்சமுத்து

இதற்கு பிறகு, கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், திடீரென கடந்த வாரம், எடப்பாடி பழனிசாமியை ரவி பச்சமுத்து சென்று சந்திக்கவும், மறுபடியும் குழப்பம் வந்தது.. எடப்பாடியே இப்போது பாஜகவுடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாமல் தமிழகமே குழம்பி போயுள்ள நிலையில், ரவி பச்சமுத்து, எடப்பாடியை சந்தித்து பேசியது, பல யூகங்களை கிளப்பி விட்டு வருகிறது.. எனினும், ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

 பச்சமுத்து

பச்சமுத்து

வரும் 2024 மக்களவை தேர்தல் கூட்டணியையும் பேசி முடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.... அதாவதுபெரம்பலூர் தொகுதியையே பாரிவேந்தருக்கு மறுபடியும் பெற்று தருவதாக பாரிவேந்தருக்கு பாஜக உறுதி தந்திருக்கிறதாம்.. ஆனாலும், இனிமேல் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு தனக்கு உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால், தனக்கு பதிலாக மகன் ரவி பச்சமுத்துவை நிறுத்த முடிவெடுத்திருக்கிறாராம் பாரிவேந்தர்... இதையடுத்து, அப்பாவின் பெரம்பலூர் தொகுதிக்குள் ரவி பச்சமுத்து அடிக்கடி தென்பட துவங்கி உள்ளாராம்.

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

இப்படி திமுக கூட்டணியில் இருந்து கழண்டிக்கொண்டு, பாஜகவுக்கு கூட்டணி வைக்க ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு.. இந்த முடிவு கடந்த வருடமே எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.. அதனால்தான், உள்ளாட்சித் தேர்தலிலேயே இந்திய ஜனநாயக கட்சி, திமுகவின் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.. ஐஜேகவுக்கு சீட் தருவதாக பாஜக உறுதி தந்தது ஒருபக்கம் இருந்தாலும், பாஜகவுக்கு யார் சீட் தரப்போகிறார்கள்? எவ்வளவு சீட் தரப்போகிறார்கள்? என்பதுதான் இப்போது ஆர்வமாக கிளம்பி உள்ளது..!!

English summary
Top Secret: IJK Parivendar has finished negotiating the perambalur constituency in the bjp alliane, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X