தேனியில் கடும் போட்டி.. டிடிவி vs தங்க தமிழ்ச்செல்வன்.. யாருக்கு வெற்றி? அப்போ அதிமுக.. தந்தி டிவி
சென்னை: தேனி லோக்சபா தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் இந்த தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக என கடும் போட்டி நிலவுகிறது. யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தந்தி டிவி வெளியிட்ட சர்வே முடிவுகளை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்ற்ன.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாளை மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளது. இதனிடையே, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். திமுகவில் தங்க தமிழ்செல்வனும், அதிமுகவில் விடி நாரயணாசாமியும் போட்டியிடுகிறார்கள். டிடிவி தினகரன் இந்த தொகுதியில் போட்டியிடுவதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் படி தேனி தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. எனினும், இந்த ரேசில் தங்க தமிழ்செல்வனே முந்துகிறார். அதாவது திமுக 32 முதல் 38 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு விவரம்:
திமுக: 32% - 38%
அமமுக: 28% - 34%
அதிமுக: 25% - 31%
நாம் தமிழர்: 5% - 8%
மற்றவை: 1% - 3%.












Click it and Unblock the Notifications