சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடவும் முடியாது..ஒளியவும் முடியாது! கேடிகளுக்கு கடிவாளம் போடும் ‘ட்ராக் கேடி’! தமிழக போலீஸ் அசத்தல்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் ட்ராக் கேடி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும், கூலிப்படை நடமாட்டம் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து ரவுடிகளை பிடிக்கும் முயற்சிகள் போலீசாரால் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் நெல்லை மட்டுமல்லாது சென்னையில் அட்டகாசத்தை ஆரம்பித்து பல ரவுடிகள் போலீசார் நடத்திய மின்னல் வேட்டையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

பூரா ரவுடி பசங்களும் பாஜகவில்! இதைச் செய்தால் தான் நமக்கு மரியாதை! பாடம் நடத்திய துரைமுருகன்! பூரா ரவுடி பசங்களும் பாஜகவில்! இதைச் செய்தால் தான் நமக்கு மரியாதை! பாடம் நடத்திய துரைமுருகன்!

தமிழக காவல்துறை

தமிழக காவல்துறை

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 A+ லிஸ்ட்டில் இருந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். இதனால் தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீண்டும் தலைமறைவாகியுள்ளனர்.

 சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் ட்ராக் கேடி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம் செய்து வைத்தார். இச்செயலியில் குற்ற சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது.

ட்ராக் கேடி

ட்ராக் கேடி

39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் குற்ற சரித்திரப் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த செயலியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், மதுரை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் உடனிருந்தனர்.

 ரவுடிகளை கண்காணிக்கலாம்

ரவுடிகளை கண்காணிக்கலாம்

டிராக் கேடி செயலி மூலம் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணைப் பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி வைக்க முடியும் எனவும், அதன் காரணமாக காவல் அதிகாரிகளால் குற்றவாளிகளின் பல்வேறு விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
In order to keep track of criminals in Tamil Nadu, the Tamil Nadu Police has developed an app called Track KD. It was introduced by Tamil Nadu DGP Sylendra Babu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X