ஆயுத பூஜைக்கு கோவை பெரியார் அறிவுலகத்திற்கு லீவு! அறிவுக்கு விடுமுறையா? பேஷ் பேஷ்! TRB ராஜா தாக்கு!
சென்னை: கோவையில் பெரியார் அறிவுலகத்திற்கு, ஆயுத பூஜையையொட்டி, நேற்றும், இன்றும் விடுமுறை அறிவித்த அறிவார்ந்த ஆட்சி இன்றைய தவெக ஆட்சி என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆயுத பூசைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே 'லீவு விட்ட' அறிவார்ந்த ஆட்சி இன்றைய தவெக ஆட்சி!

பேஷ்! பேஷ்! ஆனால், அறிவாலயத்துக் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது! அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே!" என்று பதிவிட்டுள்ளார்.
விடுமுறை
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
திமுக ஐடி விங் கண்டனம்
ஆயுத பூசைக்கு #பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய #TVK ஆட்சி! 🔥பேஷ்! பேஷ்!ஆனால், அறிவாலயத்துக் #கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது!அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே !#TvkFails #PeriyarArivulagam
— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 20, 2026
அந்த வகையில் திமு ஐடி விங் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட இந்த TVK அரசுக்கு இல்லையா?
திராவிட மாடல்
அல்லது, விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பெரியார் அறிவுலகத்தைப் பார்த்து, அதை உருவாக்கிய திராவிட மாடல் ஆட்சியையும், முதலமைச்சராக இருந்த ஸ்டாலினின் சாதனையையும் பாராட்டிவிடுவார்கள் என்ற அச்சமா?
பெரியார் அறிவுலகம்
கோவையில் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட இன்று வந்த மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பதாகத் தகவல்கள் வருகின்றன!
பெரியார் கொள்கைத் தலைவர்
மக்கள் வருவதற்காகத்தானே நூலகம்? மக்கள் அதிகம் வரும் நாளிலேயே அதை மூடி வைப்பது என்ன நிர்வாகம்? பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் TVK, பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக எழும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
இல்லங்களில் புத்தகங்கள்
ஆன்மிக நம்பிக்கையுள்ள மக்கள்கூட அறிவைப் போற்றும் விதமாகத்தானே விஜயதசமியைக் கொண்டாடுகிறார்கள்! அன்றைய தினம் இல்லங்களில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கி வைப்பதும் வழக்கம்.
அப்படியிருக்க, அறிவைப் போற்றும் நாளிலேயே கோவையின் அறிவுலகக் கதவுகள் மாணவர்களுக்கு மூடப்பட்டிருப்பது ஏன்?
இன்றே, மதியமாவது, #பெரியார் அறிவுலகத்தைத் திறந்து பொதுமக்களையும் மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும்!
அறிவுலகத்திற்கு விடுமுறை கூடாது
இனிவரும் காலங்களிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் அறிவுலகம் செயல்பட வேண்டும்! அறிவைப் பரப்புவதற்கு விடுமுறை நாளே இருக்கக்கூடாது! என கண்டனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் ஏமாற்றம்
இன்று விடுமுறை தினம் என்பதால் கோவையை சுற்றியுள்ள ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து பார்த்த போது அந்த நூலகம் திடீரென மூடப்பட்டதால் குழந்தைகள் ஏமாற்றமடைந்ததாக பெற்றோர் வேதனை தெரிவிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் படிப்பதற்குத்தானே நூலகம், அதை திறந்துவைத்துவிட்டு எதற்காக மூடினார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இணையதளத்தில் பார்த்த போது கூட அறிவுலகம் திறந்திருப்பதாகத்தான் போடப்பட்டிருந்தது. முன் கூட்டியே எந்த அறவிப்பும் இல்லாமல் மூடப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
7 தளங்கள்
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பில் ரூ 300 கோடியில் பெரியார் அறிவுலகம் எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டது.
இந்த கட்டுமான பணிகள் திமுக ஆட்சியில் 2024 இல் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நூலகத்தின் தரைதளம் 1.98 லட்சம் சதுரடியில் உள்ளது. மொத்தம் 7 தளங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ 245 கோடியாகும். புத்தகங்களுக்கு ரூ 50 கோடியும், இ புத்தகங்களுக்கு ரூ 5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
