விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன?
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி இருக்கும் இனிகோ இருதயராஜ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதியை திமுக வசம் கொண்டு வந்தவர். இந்த தொகுதியில் அதிகம் வசிக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர். விஜய்க்கு எதிராக இப்போது மல்லுக் கட்டும் இனிகோ இருதயராஜின் பலம், பலவீனங்கள் என்னென்ன?
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தமாக 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருச்சி கிழக்கு - தேர்தல் வரலாறு
1984, 1989 ஆம் ஆண்டுகளில் மலர்மன்னன், 1996, 2001 சட்டசபை தேர்தல்களில் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கை மீண்டும் திமுக வசம் கொண்டு வந்தார்.
விஜய்
தவெக தலைவர் விஜய் இந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் விஜய். அன்றே, அந்தத் தொகுதியில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். விஜய்யின் வருகையில் ஸ்டார் தொகுதி ஆகியுள்ளது திருச்சி கிழக்கு.
திமுக வேட்பாளர்
திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை மிகச் சிறிய தொகுதி. திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் இஸ்லாமியர்கள், அடுத்ததாக தலித்துகள். பொதுவாகவே திமுகவிற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் விழுவது கடந்த தேர்தல்களில் நாம் பார்க்கக்கூடியது.
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிகமாக வசிக்கும் கிறிஸ்தவ வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த இனிகோ இருதயராஜ் திமுக சார்பாக மீண்டும் போட்டியிடுவது அக்கட்சிக்கு பலம்.
யார் இந்த இனிகோ இருதயராஜ்?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் இனிகோ இருதயராஜ். சிறுவயதிலேயே திருச்சி ஜோசப் கல்லூரியில் உள்ள பேராலயத்திற்கு அவருடைய தந்தை உபதேசியாக பணியமர்த்தப்பட்டதால் சொந்த ஊரைவிட்டு திருச்சி மேலசிந்தாமணி பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்த இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் தொழிலில் நுழைந்து கார்மெண்ட்ஸ் தொழிலில் ஏற்றுமதி - இறக்குமதி செய்து வருகிறார்.
மறைந்த முதல்வர் கருணாநிதி மீது கொண்டிருந்த ஈடுபாட்டால் பள்ளிப் பருவத்திலிருந்து திமுகவில் இணைந்து பணியாற்றுகிறார், திமுகவின் வாக்குச்சாவடி உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1992 முதல் திமுகவின் அடிப்படை உறுப்பினர். திமுக தேர்தல் பணிகளில் பல்வேறு தலைவர்கள் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உறுதுணையாக இருந்தவர். ஆண்டுதோறும் திமுக மற்றும் கூட்டணித் தலைவர்களை அழைத்து கிறிஸ்துமஸ் விழாவை மாநில அளவில் சிறப்பாக நடத்துபவர்.
விஜய் vs இனிகோ இருதயராஜ்
இவைதவிர, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனர் தலைவராகவும் உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா என்பவரின் ஆலோசனைக்கு இணங்க கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
கடந்த 2021இல் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை வென்றார். இந்நிலையில் மீண்டும் வேட்பாளராக அதே தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார் இனிகோ இருதயராஜ். இப்போது, பெரும் தலையான விஜய்யை எதிர்த்து மல்லுக் கட்டுகிறார்.
இனிகோ இருதயராஜ் நம்பிக்கை
"கிழக்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நல்லது மற்றும் துக்க நிகழ்வுகளில் நின்று அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டுள்ளேன். நான் எவ்வாறாகச் செயல்பட்டேன் என்று மக்களுக்குத் தெரியும். வருகின்ற தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என நம்பிக்கையோடு கூறி வருகிறார் இனிகோ இருதயராஜ்.
எனினும், எதிர்த்து நிற்பது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்பதால், திருச்சி கிழக்கில் வெல்வது இனிகோ இருதயராஜுக்கு கடும் சவால் தான். சமூக பலமும், ரசிகர்கள் பலமும் விஜய்க்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பெரும் தலையைச் சாய்த்து இனிகோ இருதயராஜ் வெற்றி பெறுவாரா என்பது ஒட்டுமொத்த திமுகவினரின் எதிர்பார்ப்பு.
-
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications