Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உன் "முதலாளியை" விட மாட்டேன்! மொத்த டீட்டெயிலையும் எடுத்த வருண் குமார்! நாம் தமிழருக்கு செக்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சரமாரி புகார்களை வருண் அடுக்கி உள்ளார்.

இந்த விவகாரத்தில் வருண் புகைப்படத்தை தவறாக சித்தரித்து போஸ்ட் செய்திருந்த @kuma90313394 என்ற ஐடியை வருண் ஐபிஎஸ் எச்சரித்து உள்ளார். அதில், விரைவில் இவனும் @kuma90313394 இவனது முதலாளியும் இவர்கள் செய்த/செய்கின்ற குற்றத்திற்கு பிடிபடுவார்கள்.

naam tamilar Seeman Kaliyamma

இவன் பெயர் செல்வகாந்தன் DoB: 24-9-73. இவனது மனைவி பெயரில் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி முகவரியில் போலி பாஸ்போர்ட் T88.....64 வாங்கியுள்ளான். தற்சமயம் கனடாவில் Rogers Communication குழுமத்தில் பணிபுரிகிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றம் புரியும் இந்த மன நோயாளி பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. போலி பாஸ்போர்ட் வாங்கியது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தொடர்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பிரிவினை வாதம் உட்பட. இவனது கனடா கைபேசி எண் +16******2019, என்று எச்சரித்து உள்ளார்.

கைது செய்யப்பட வாய்ப்பு: இதில் நாம் தமிழர் கட்சியின் டாப் அதிகாரிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவ்வப்போது முதல்வர் குறித்தும், ஆட்சி குறித்தும் அவதூறாக பேசி கைதாக்குவது வழக்கம். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

ஆடியோ லீக்: இதையடுத்து சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அதே சமயம் அவரின் போனில் இருந்து சீமான் பேசியதாக பல ஆடியோக்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான் காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் ஆடியோ இருந்தது. அதில், காளியம்மாள் எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

மறுத்த நாம் தமிழர் - ஒப்புக்கொண்ட சீமான்: ஆனால் இந்த விவகாரத்தில்.. ஆடியோ வெளியான சமயத்தில் இதை நாம் தமிழர் பலர் மறுத்தனர். அதாவது இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். ஏஐ வைத்து இப்படி எல்லாம் ஆடியோ உருவாக்கலாம் என்றனர்.

இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர். . இப்படிப்பட்ட நிலையில்தான் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். நாம் தமிழர் கஷ்டப்பட்டு மறுக்க.. சீமான் தான்தான் பேசினேன் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிசிறு அடிக்குது: பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், தீடீரென இந்த வெண்ணெய்களுக்கு காளியம்மாள் மீது பாசம். டேய்... அவள்தான் மயிலாடுதுறையில் போட்டியிட்டேளே.. ***** அப்போதே அவளை ஜெயிக்க வேண்டியது தானே. வெண்ணெய்களா அப்போது ஏன் ஓட்டு போடவில்லை.

விமர்சனம்: இதனையடுத்து தமது செல்போனில் இருந்துதான் திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார். அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார். சில நாம் தமிழர் கட்சியினர் வருண் குமார் குடும்பம் பற்றியும் மோசமாக பேசினர்.

புகார்: இதில்தான் திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

naam tamilar Seeman Kaliyamma

இது பற்றி வருண் குமார் செய்துள்ள போஸ்டில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும்.

இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம், என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+