போன்பே - கூகுள் பே பணம் மாற்ற முடியலையா.. உடனே இந்த 5 ஸ்டெப்பை பாலோ பண்ணுங்க!
சென்னை: நாம் அனைவரும் யுபிஐ எனும் கூகுள்பே, ஜிபே, பேடிஎம் உள்பட பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி சில நொடிகளில் பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். இதனால் நாம் அதிகமாக கையில் பணம் எடுத்து செல்வது இல்லை. ஆனால் இப்போது அடிக்கடி யுபிஐ செயலிகள் முடங்கி விடுகின்றன. இதனால் பலரும் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றன. இந்த வேளையில் பிரச்சனையில் இருந்து விடுபட 5 முக்கிய வழிமுறைகளை பின்பற்றலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிக்கடை, டீக்கடை, ஷாப்பிங் மால் என்று எங்கு சென்றாலும் நம் கையில் பணம் இருக்க வேண்டும். ஆனால் இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. யுபிஐ செயலி வந்த பிறகு கையில் பணம் வைத்திருக்கும் பணத்தை நாம் அனைவரும் குறைத்து கொண்டோம்.

இன்னும் சொல்லப்போனால் கையில் பணம் இல்லாமல் கூட நினைத்து நேரத்தில் நினைத்த கடைசியில் பொருட்களை வாங்கிவிட்டு யுபிஐ செயலி வழியாக பணப்பரிமாற்றம் செய்யும் வழக்கம் கூட பலரிடம் வந்துவிட்டது.
ஆனால் இப்போது அடிக்கடி யுபிஐ செயலிகள் பிரச்சனையை தருகின்றன. கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்பட பிற யுபிஐ செயலிகளில் அடிக்கடி பணப்பரிமாற்றம் செய்வதில் பிரச்சனை வருகிறது. நேற்று கூட பல பயனாளர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டனர். இதனால் யுபிஐ செயலியில் பணம் மாற்றி பொருட்களை வாங்கலாம் என்று செல்வோருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்த முடியாமல் பலரும் தவிக்கின்றனர். ஏன் நம்மில் சிலரும் கூட இந்த பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கலாம்.
இந்நிலையில் தான் யூபிஐ செயலியில் பணம் பரிமாற்றம் செய்ய முடியாவிட்டால் உடனடியாக பிற 5 வழிகளில் பணம் செலுத்த பார்க்கலாம். அதன்படி முதல் வழி என்பது நாம் குறிப்பிட்ட ஒரு யுபிஐ செயலியை பயன்படுத்துவதற்கு பதில் இருவேறு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளை பயன்படுத்தலாம். உதாரணமாக ஜிபே, கூகுள்பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகள் உள்ளன. அப்போது ஒரு செயலியில் இருந்து பணப்பரிமாற்றம் நடக்காவிட்டால் இன்னொரு செயலி கைக்கொடுக்கலாம்.
2வது வழி என்பது சம்பந்தப்பட்ட வங்கிகளின் செயலியை பயன்படுத்தலாம். இப்போது யுபிஐ செயலிகள் போல் வங்கிகளும் செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இதனால் நாம் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியின் செயலியை டவுன்லோட் செய்து ஓபன் செய்திருக்க வேண்டும். அதன்பிறகு செயலியில் இருந்து க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பணத்தை பரிமாற்றம் செய்யலாம். தற்போது பல வங்கிகளின் செயலிகளும் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பணப்பரிமாற்றம் செய்யும் ஆப்ஷனை வழங்கி உள்ளதால் இந்த முறையை பயன்படுத்தலாம்.
3வது வழி என்னவென்றால் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இது டீக்கடை, ஹோட்டல்களுக்கு பொருந்தாது. மாறாக ஷாப்பிங் மால், பெரிய பெரிய கடைகளுக்கு பொருந்தும் என்பதால் கிரெடிட், டெபிட் கார்டுகளை கையில் வைத்திருப்பது பாதுகாப்பானதாகும்.
அதேபோல் 4வது வழி என்பது நெட் பேங்கிங் ஆப்ஷன். செல்போனில் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தும்போது அதன் மூலமாக பணத்தை அனுப்ப முடியும். 5வது வழி என்பது யுபிஐ செயலிகளை மட்டும் நம்பாமல் ஒரு டீக்கடை, ஹோட்டல், மால் செல்லும்போது அவசர காலத்தை கருதி கையில் பணத்தை வைத்து கொள்வது நல்லது. இந்த 5 ஸ்டெப்புகளை பயன்படுத்துவதன் மூலம் பிரச்சனையில் இருந்து நாம் விடுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications