படம் பார்க்க கோவை டூ சென்னை வந்து.. செக்ஸ் கல்வியை கட்டாயமாக்க சொன்ன டிடிஎப் வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்ணும் பெண்ணும் சேர்ந்தாலே தப்புதான். செக்ஸ் கல்வி கட்டாயமாக்க வேண்டும் என என்ஜாய் படம் பார்க்க கோவையிலிருந்து சென்னை வந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்தும் பைக் ரேஸ் குறித்தும் அவர் தனது பேட்டியில் பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார்.

நடிகர்கள் மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஷ்குமார், நிரஞ்சனா, அபர்ணா உள்ளிட்டோர் நடித்து பெருமாள் சசி இயக்கத்தில் வெளியான படம் என்ஜாய். இந்த படத்தில் நடிகை ஹாசின் நடுத்தர குடும்பத்து பெண்ணாக இருக்கிறார்.

ஆனாலும் அவர் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம் வருகிறார். இதற்கு காரணம் இவர் வீக் என்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். இதை பார்க்கும் மூன்று தோழிகள் தாங்களும் வசதியானவர்களாக மாற ஒரு பார்ட்டிக்காக கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டிற்கு செல்கிறார்கள்.

3 இளைஞர்கள்

3 இளைஞர்கள்

அங்கு என்ஜாய் செய்வதற்காக 3 இளைஞர்கள் வருகிறார்கள். இவர்களும் அந்த 3 தோழிகளும் இக்கட்டான சூழலால் ஒரே அறையில் தங்கும் நிலை உருவாகிறது. அந்த 3 பெண்களுக்கு உதவ நினைத்து 3 இளைஞர்களும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் மீண்டு வந்தனரா என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

ஆடம்பர வாழ்க்கை

ஆடம்பர வாழ்க்கை

பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கை எப்படி நடுத்தர மற்றும் ஏழை எளியவர்களை சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கிறது என்பதுதான் கதையாக உள்ளது. இந்த படத்தை கோவை யூடியூர் டிடிஎஃப் வாசன் பார்த்தார். இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்ஜாய் படத்தை நான் என்ஜாய் செய்து பார்த்தேன். இதில் நடித்திருந்தவர்கள் யூடியூபர்களும் என் நண்பர்களும்தான்.

யூடியூபர்கள்

யூடியூபர்கள்

அதனால் யூடியூபர்களுக்கு ஆதரவு கொடுக்க கோவையிலிருந்து சென்னைக்கு இந்த படத்தை பார்க்க வந்தேன். நான் டாட்டூ குத்திக் கொண்டிருந்தேன். 27 மணி நேரமாக டாட்டூ குத்தியதால் மிகவும் சோர்வாக காணபட்டேன். அதனால் தூங்கலாம் என நினைத்தேன். இல்லை நாம் படத்திற்கு போய் நண்பர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என நினைத்து வந்தேன். படம் நன்றாக இருந்தது.

ஆடம்பர வாழ்க்கை

ஆடம்பர வாழ்க்கை

கல்லூரி பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்வார்கள். அது போல் செல்லக் கூடாது என இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். கடலூரில் என்னை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பசங்களை மாஸாக உட்கார வைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

கடவுள் அனுகிரகம்

கடவுள் அனுகிரகம்

சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வருகிறது. கடவுள் அனுகிரகம் இருந்தால் நடிக்கலாம். பைக் ரேசிங் செல்லும் போது எந்த இடத்தில் எப்படி ஓட்ட வேண்டுமோ அந்த இடத்தில் அப்படி ஓட்ட வேண்டும். நான் கூட 247 கி.மீ. வேகத்தில் ஓட்டியதாக ஒரு பெரிய பிரச்சினை வந்தது. நான் ஓட்டியது மிகப் பெரிய ஹைவே. வடஇந்தியாவில் அந்த நெடுஞ்சாலையில் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இடத்தில் நாம் வேகமாக போனால் யாருக்கும் எந்தவித இடையூறும் இருக்காது.

த்ரில்லிங்

த்ரில்லிங்

வேகமாக வாகனத்தை ஓட்டுவது திரில்லிங்கை கொடுக்கும், ஆனால் எல்லா இடங்களிலும் வேகமாக ஓட்டினால் அது உயிரிழப்பையும் கொடுங்கள். எனவே வேகத்தை குறைங்க! ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். என்ஜாய் படத்தை மக்கள் பொழுதுப்போக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய விஷயங்களை பெரிதுப்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வக்கிரமங்களுக்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பாலியல் கல்வி

பாலியல் கல்வி

பள்ளிக் கூடங்களில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என பயந்திருந்தேன். எனவே பள்ளிகளில் பாலியல் கல்வியை சொல்லிக் கொடுத்தால் அது குறித்த ஒரு தெளிவு கிடைக்கும். இரு பாலரும் சேர்ந்து படிக்க வேண்டும். பெண்களும் ஆண்களும் தவறு செய்யக் கூடாது ஒழுக்கமாக வளர வேண்டும் என நினைத்து பெற்றோர் அவர்களை இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க மாட்டார்கள். இதனால்தான் இந்த படத்தில் கூட பெண்ணும் பெண்ணும் சேர்ந்து சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீக் எண்ட் பார்ட்டிக்கு செல்கிறார். பையனும் பொண்ணும் சேர்ந்து பழக வேண்டும். எல்லாமே நம் பார்வையில்தான் இருக்கிறது. இவ்வாறு டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+