“செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கல”- டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. அடையாளம் காட்டிய கட்சி அழிய வேண்டும் எனப் பேசியது கண்டிக்கத்தகக்து" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்று தற்போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்து வருகிறார் செங்கோட்டையன். சட்டமன்றத்தில் அவை முன்னவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தவெகவில் இருப்பவர்களிலேயே சீனியர் சட்டமன்றவாதியாக உள்ளார் செங்கோட்டையன்.

TTV Dhinakaran

இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று தவெக கூட்டத்தில் பேசுகையில், அதிமுகவைச் சேர்ந்த மேலும் பல எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என பேசினார். அதிமுக நிலைமையைப் பார்க்கும்போது, ஆறு பேர் ராஜினாமா செய்துவிட்டு ஓடி வந்து விட்டார்கள். இன்னும் 10 பேர் ரெடியாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. அந்தப் 10 பேரும் வந்துவிட்டால் முடிந்துபோச்சு எனக் கூறினார்.

மேலும், 25 பேர் ஒட்டுமொத்தமாக வருவதற்கு ரெடியாகிவிட்டார்கள். இதெல்லாம் நடக்கும்போதுதான் உங்களுக்குத் தெரியும். மதிமுகவை போன்று அதிமுக ஆகிவிடும் எனவும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார் செங்கோட்டையன்.

இந்நிலையில் செங்கோட்டையனின் பேச்சை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், செங்கோட்டையன் பேச்சை விமர்சித்துள்ளார்.

தினகரன் பேசுகையில், "அண்ணன் செங்கோட்டையன் என்றால் உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியும். இன்றைக்குத் தானே அவர் தவெகவுக்கு தாவியுள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அவர் அதிமுகவின் தொண்டர். ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தவர்.

அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்ட கோபத்தில் தவெகவில் இணைந்தார். அங்கு எம்எல்ஏ ஆகி அமைச்சராகியுள்ளது வேறு. ஆனால் செங்கோட்டையன் என்றால் இன்றைக்கு உலகிற்கு எப்படி தெரியும். அந்த அடையாளத்தை கொடுத்த கட்சியை, யாரோ சிலரின் மீதுள்ள கோபத்தில் அந்த கட்சி அழிந்துவிடும் என்கிறார்.

அப்படி நினைக்கும் அளவிற்கு வன்மம் பிடித்த மனிதராக செங்கோட்டையன் இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. அவரை கட்சியில் இருந்து நீக்கியதால் கோபத்தில் தவெகவுக்கு சென்று இருக்கலாம். ஆனால் மதிமுக அளவுக்கு அதிமுக போய்விடும் என பேசுவது சரியல்ல. அதோடு அதிமுகவை அழிக்கின்ற விதமாக எம்எல்ஏக்களை போன் போட்டு அழைத்தார். அங்கு அவருடைய நிலைமை எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

செங்கோட்டையனுக்கு அடையாளம், முகவரி தந்து பல முறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய இயக்கம் அழிந்து விட வேண்டும் என்கிறார். தனக்கு இடம் கொடுக்கவில்லை, வெளியேற்றி விட்டார்கள் என்ற கோபத்தில் புதிதாக வந்த கட்சிக்கு வால் பிடித்து கொண்டிருக்கும் நபர் பேசுகிறார். தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால், அவர் என்ன பண்ணி இருப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி." என கடுமையாக விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.

மேலும் பேசிய அவர், "அந்த கட்சிக்கு பத்து பேர் வருவார்கள் என்கிறார். எப்படி வருவார்கள்? அவர்கள் எல்லாம் விஜய்யின் ரசிகர்களா? எதன் அடிப்படையில் வருவார்கள் என்று சொல்கிறார்? ஆட்சி அமைப்பதற்கு சராசரி அரசியல்வாதியை விட கீழிறங்கி, அமமுகவின் ஒரே ஒரு எம்எல்ஏவிடம் பேரம் பேசியதை எல்லாம் அனைவரும் பார்த்தீர்கள்" என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+