எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. விஜய் தலைமையில் புதிய கூட்டணி! டிடிவி சொல்லும் கணக்கு
சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். தேர்தல் நேரத்தில் எதிர்பாராத அணி மாற்றங்கள் நிகழலாம். எந்தக் கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அதே நேரத்தில் விஜய் கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக பிரசாரத்தில், இளைஞர்கள் சிலர் அதிமுகக் கொடியுடன் பங்கேற்றனர். இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, "கொடி பறக்குதா? பிள்ளையா சுழி போட்டாங்க!" என்று பேசினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது யாருடன் என்பது போகப் போகத்தான் தெரியும்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என 4 முனை போட்டிக்கு தான் வாய்ப்பு உள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்பாராத அணி மாற்றங்கள் நிகழலாம். எந்தக் கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும்.
ஆனால் பழனிசாமி பேசுவதை பார்த்தால், பிள்ளையார் சுழி போட்டாங்க என்று சொல்வதை பார்க்கும் போது, விஜய் தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு தயாராகிவிட்டாரோ? அல்லது முயற்சி செய்கிறாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவரது கூட்டத்தில் விஜய் கொடியை அதிமுகவினரே தூக்கி பிடித்து நின்றதை அனைவரும் பார்த்து இருக்கிறோம் என்பதால் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், அதிமுக - தவெக இடையே கூட்டணி உருவாக இருக்கிறதா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில்தான், டி.டி.வி. தினகரன், விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய டி.டி.வி. தினகரன், "எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்; அவரை மாற்றும் வரை மீண்டும் கூட்டணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை" என்று கூறி வருகிறார்.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications