சென்னையில் அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசை வறுத்தெடுத்த டி.டி.வி தினகரன்!
சென்னை: சென்னையில் பெரியார் ஈ.வே.ரா சாலையை தொடர்ந்து தற்போது அண்ணா, காமராஜர் சாலையின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் சாலை பெயர் மாற்றம்
சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கி.மீ. நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணா, காமராஜர் சாலை பெயரும் மாற்றம்
இந்த பெயர் மாற்றத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் இருந்த சாலைகளின் பெயரை மாற்றி தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

டி.டி.வி தினகரன் கண்டனம்
தமிழக அரசின் இந்த செயலுக்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:- சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

நடவடிக்கை வேண்டும்
வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு.. டிடிவி தினகரன் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications