Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக தலைமையில் ஒரு கூட்டணி.. அதிமுகவின் பெயரை சொல்லாமல் அசிங்கப்படுத்திய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள், பரபரக்கும் பிரச்சாரங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்று அதிமுகவின் பெயரைக் கூட சொல்லாமல் பேசினார்.

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த அதிரடியாக அரசியலில் என்ட்ரி கொடுத்தார் தவெக தலைவர் விஜய். ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

TVK 3rd Year Anniversary

கரூர் நிகழ்வு

கடந்த 2024 கட்சி தொடங்கப்பட்ட நிலையில் தொடக்க மாநாடு விக்கிரவாண்டியிலும், இரண்டாம் ஆண்டு மாநாடு மதுரையில் கடந்த வருடமும் நடைபெற்றது. தொடர்ந்து விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் 3வது வாரத்திலேயே கரூர் தவெக நிகழ்வில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மற்றும் தவெகவின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது. விஜய் வெளியில் தலை காட்டுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிட தடை ஆகியவற்றால் விஜய் மிகுந்த நெருக்கடியில் உள்ளார்.

தொடக்க விழா

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தும் அவர்களுடன் தற்போதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்துவிட்டன. மற்ற கட்சிகளை விட தவெகவினர் தேர்தல் பணியில் மந்தமாக உள்ளனர். இந்நிலையில் தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பனையூரே களைகட்டியுள்ளது.

இதில் விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். விஜய் தற்போது பனையூருக்கு வருகை புரிந்துள்ளார். கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிழ்ச்சியில் விஜய் பங்கேற்றுப் பேசுகையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம். அது உங்களால் தான். நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும்தான் மிகப்பெரிய காரணம்.

நீங்கள் தான் என்னுடைய மிகப்பெரிய பலம். உங்களை நம்பித்தான் நாங்களும், கட்சியும் இருக்கின்றோம். 1977 ஜூன் மாதத்தில் எம்ஜிஆர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அப்போது, அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமருகின்ற நிலை ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்து கண்ணீர் விட்டு அழுதேன். அன்று அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அதிமுக என்று கூறினார்.

2017, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையைப் பற்றி யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா, எம்ஜிஆர் இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஆகிவிட்டதே என்று நினைத்து கண்ணீர் வடித்தனர். இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். இப்படியெல்லாம் நாம் பேசுவதைப் பார்த்து சிலர் கொந்தளிப்பார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் கொந்தளிப்பது தான் அவர்கள் வேலையே.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, ஜெயித்து போதும் கூட சட்டசபையில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டார். விஜய்க்கு என்ன பெரிய அனுபவம் இருக்கிறது என்று கேட்ட அதே வாய் தான் அன்று எம்ஜிஆரைப் பற்றியும் பேசியது. அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், கவர்ச்சியை மட்டுமே நம்பியவர், அட்டக்கத்தி, நிருபர்களைச் சந்திக்க மாட்டார், வாய் விளம்பர வள்ளல், பதில் சொல்ல தெரியாதவர், கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்று பேசினர்.

எம்ஜிஆர் அவர்களை மட்டுமல்ல அவர்களுடைய தொண்டர்களையும் அப்படித்தான் பேசினார். மக்கள் அமைதி காத்து என்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட கோட்டை என்பது அவர்களுக்குப் பகல் கனவாகவே மாறிவிட்டது. இன்னும் பழைய தேய்ந்து போன, துருப்பிடித்துப் போன, நஞ்சுபோன பழைய ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர்.

டெக்னாலஜி டெவலப்பாகி எங்கோ சென்று கொண்டிருக்கிறது. அதனால், உங்களுடைய டெக்னிக்கையாவது மாற்றுங்கள். காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவருக்கு இலக்கியம் தெரியுமா என்றெல்லாம் பேசினார்கள். இப்படி அவர்கள் செய்கிற அராஜகம், ஊழலைப் பற்றி சொன்னால், முக்கியமாக நாம் எடுத்து சொன்னால் அதே பழைய டப்பாவை உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும். பழைய டப்பாவைத் தான் உருட்ட தானே தெரியும். நம்மை தவிர அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் தில் யாருக்கு இருக்கிறது. மக்களுடைய ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான். டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால் திமுக தீயசக்தியைப் பற்றி, அநீதி அரஜாகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என்று குறள் எழுதியிருப்பார்.

மும்முனை போட்டி, நான்குமுனைப் போட்டியில் மாபெரும் மக்கள் சக்தியாக நம் அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம், பாஜக தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும மக்கள் சக்தியான நம்மாள் மட்டுமே முடியும் என்று பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+