எம்எல்ஏக்களாக பதவியேற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா.. தவெகவுக்கு புது பலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதி மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த இரு தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

TVK Maragatham Kumaravel Sathyabama

வாக்கு எண்ணிக்கை

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்றது.

வாக்குப் பதிவில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட முன்னிலையில் இருந்தார். எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் பெற்றதைவிட தற்போது தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 1,632 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 70,916 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பு

அதேபோல, தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) இரண்டாம் இடத்தையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற சான்றிதழை அளித்து பதவியேற்றனர்.

ஜேசிடி பிரபாகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து, எம்எல்ஏக்களாக பதவியற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர். அதிமுகவிடம் இருந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில், தற்போது தமிழக பேரவையில் தவெக எம்எல்ஏக்களின் பலம் 109ஆக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+