சென்னை அடையாறில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடையாறு அருகே நேற்று இரவு தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் ஓட ஓட வெட்டி படுகொ* செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு அருகே வண்ணான்துறை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 45). தவெக நிர்வாகி. இவர் நேற்று இரவு அப்பகுதியில் மர்ம கும்பல்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder of TVK functionary

மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா?, என்ன காரணம் என்பது குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 5 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்கள் 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக இந்த கொலை முன்விரோதம் காரணமாக அரங்கேறி இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவா என்பவரை கொலை செய்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்குவதற்காகத் தான் இந்த கொலை அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன் என்பவர் தலைமையிலான கும்பல் தான் சிவாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நேற்று அடையாறு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+