புயல் வேகத்தில் புஸ்ஸி ஆனந்த்..போலீசாரின் 21 கேள்விகளுக்கு பக்கா பதில்! இனி எல்லாம் ‘அவர்’ கையில்..
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்க வேண்டும் என காவல்துறை கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கான ஆவணங்களுடன் பதில் அளித்துள்ளார் தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வரும் நேற்று வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் ஒரே நாளில் 126 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்ல் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர. மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடுகள் நடக்கிறது. முன்னதாக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் விழுப்புரம் காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் இருந்து எவ்வளவு பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள்? என கேட்கப்பட்டது.
மேலும், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? எத்தனை இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது? பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? மாநாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள மேடையின் அளவுகள் என்னென்ன? மேடையில் மொத்தம் எத்தனை இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது? உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த கடிதத்துக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நேற்று முன் தினம் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காவல்துறை கேட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பதில் தயார் செய்த நிலையில், கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடம் ஆவணங்களுடன் இன்று சமர்ப்பித்தார். அதில் மாநாட்டுக்கு வரும் விருந்தினர்கள், தொண்டர்கள் எத்தனை பேர் வருவார்கள், மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளிட்டவை குறித்து விரிவாக அறிக்கையை போல தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புஸ்ஸி ஆனந்த் சார்பில் விழுப்புரம் எஸ்பி இடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாடு கேள்விகளுக்கு பதில் தொடர்பாக புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது காவல்துறை கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. விரிவான பதில்களை அளித்துள்ளோம். இனி காவல்துறையினர் தான் முடிவெடுப்பார்கள்” எனக் கூறிவிட்டு சென்று விட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications