யார் யாருக்கு மாதம் ரூ.4000? தவெக அரசின் புதிய நிதியுதவி திட்டத்துக்கு முழு தகுதிகள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியான வேலையில்லா இளைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்த அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கு ரூ.4,000 மற்றும் டிப்ளமோ, ITI முடித்தவர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கான தகுதிகள், யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன.

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதுமே, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டம் தான்.

TVK 4 000 Monthly Aid TVK Government 4 000 Scheme Financial Assistance Welfare Scheme CM Vijay Tamil Nadu Monthly Aid Unemployment Assistance Government Scheme TVK 4000 4000

தவெக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 4,000 உதவித்தொகையும், டிப்ளமோ, ஐடிஐ (ITI) மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வரையும் வழங்கப்படும் என்று சொல்லியிருந்தது. படித்து முடித்துவிட்டு வேலை தேடும் காலத்தில், இளைஞர்கள் தங்கள் சொந்தச் செலவுகளுக்குப் பெற்றோரை எதிர்பார்க்கக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்த 4,000 ரூபாய் எப்போது கைக்கு வரும் என்று ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

200 யூனிட் இலவச மின்சாரம்

தவெக அரசு ஏற்கனவே 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டது. அடுத்ததாக இளைஞர்களுக்கான இந்தத் திட்டத்தைத்தான் அரசு கையில் எடுக்கப் போகிறது என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. சோஷியல் மீடியாவில் கூட, இதற்கான தகுதிகள் இவைதான், இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏகப்பட்ட தகவல்கள் வலம் வரத் தொடங்கிவிட்டன.

அப்படியானால் இதிலுள்ள அசல் உண்மை என்ன? அரசு தரப்பு என்ன சொல்கிறது? சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான (ITI) தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு விழாவில் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் இதற்குத் தெளிவான விளக்கம் அளித்திருந்தார்.

மாதந்தோறும் நிதியுதவி

வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவான ஆய்வுகள் முதற்கட்டமாக நடந்து வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

நேற்றைய தினம் புதுக்கோட்டையிலும் அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால்தான் இந்த திட்டத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை

அப்படியானால் இந்த திட்டத்தை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை என்ன? இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகள், பட்டயப் படிப்பு முடித்தவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐஐடி முடித்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு சமமான தகுதியினர் (பட்டயப் படிப்பு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தோர் போன்றவர்கள்) பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் (பொறியியல், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் போன்ற தொழிற் படிப்புகள் நீங்கலாக) ஆகியவை கல்வி தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது

அதேபோல வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக் கூடாது. வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பட்டியல் தயாரிக்கும் நாளில் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. ஆதிதிராவிட பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லப்படுகிறது..

எனினும் இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ தகுதிகளையோ அல்லது விண்ணப்பிக்கும் இணையதளத்தையோ அரசு இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிப்படி இந்த இளைஞர் நல நிதியுதவித் திட்டம் வருவது உறுதி என்றாலும், இதற்கான முழுமையான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் அனைத்தும் முதலமைச்சரின் ஒப்புதலோடு அரசாணையாக (Government Order) வெளியாகும் போது மட்டுமே அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+