விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. “கெட் அவுட்” கையெழுத்து இயக்கம் தொடங்கிய தவெக.. பேனரில் என்ன இருக்கு?
சென்னை: இன்று நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது தவெக. இதனை முதல் கையெழுத்திட்டு விஜய் தொடங்கி வைத்துள்ளா. இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டத்திற்குப் பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் அரசியல் நிகழ்வு என்பதாலும், தவெகவின் முதல் அரசியல் மாநாட்டிற்குப் பிறகும் விஜய் தனது கட்சியினர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பங்கேற்கும் நிகழ்வு என்பதாலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் இந்த பொதுக்கூட்டம் நடக்கும் வழியெங்கிலும் விஜய்யை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் விஜய்யை வரவேற்று வாசகங்கள் இடம்பெற்றிருப்பதுடன், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்றைய பொதுக்கூட்டத்தில் விஜய் முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நாதக, பாஜகவில் இருந்து விலகிய சில பிரபலங்களும் இன்று விஜய் முன்னிலை தவெக-வில் இணைய உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், இந்தக் கூட்டத்தின் மேடையில் ஒரு பேனரில் கையெழுத்திட்டுள்ளார். கூட்டத்துக்கு வந்த விஜய், பேனரில் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கெட் அவுட் செல்லும் வகையில் பேனர் வாசகத்தில் விஜய் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்து உள்ளார்.

தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டுள்ள பேனரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:
ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவானிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர்.
புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட தினிப்பொடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம்.
1. பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மைக்கு கெட் அவுட்.
2. விமர்சனத்திற்கு அஞ்சி கொடுங் கோலோடும் மக்களின் குரல்களை ஒடுக்கும் அரசியல் கோழைத்தனத்துக்கு கெட் அவுட்.
3. வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நய வஞ்சகர்களுக்கு #getout
4. விளம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடை மாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற ஆட்சி நிர்வாகம் getout.
5. சாமானியர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் நோக்கோடுடன் ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பதற்கு கெட் அவுட்.
6. ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்கை வளச் சுரண்டலுக்கும் கெட் அவுட். ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில், திமுகவினர் கெட் அவுட் பிரதமர் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் ட்ரெண்ட் செய்தனர். அதேபோல, கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், ஒருசேர மத்திய, மாநில அரசுகளுக்கு 'கெட் அவுட்' சொல்லும் வகையில் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
-
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு?












Click it and Unblock the Notifications