Vijay Sanjeev: விஜய் தீபாவளி கொண்டாட வேண்டாம்னு சொன்னதை! நண்பர் சஞ்சீவ் கூட மதிக்கல! போட்டோ பாருங்க!
சென்னை: தீபாவளி பண்டிகையை தவெக சார்பில் யாரும் கொண்டாட வேண்டாம் என தலைவர் விஜய் சொல்லியும், அவரது நண்பர் சஞ்சீவ் தனது மனைவி, குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

விஜய்யும் சஞ்சீவும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் பொதுவெளியில் கூட 'வாடா போடா' என பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம் அதிகம்.
கொரோனா காலத்தில் சஞ்சீவிற்கு பாசிட்டிவ் வந்த போது கூட அருகே இருக்கும் விஜய், சஞ்சீவுக்கு போன் செய்து சாப்பாடு கொண்டு வந்திருப்பதாக கூறி கீழே வாட்ச்மேனிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறினாராம்.
அது போல் விஜய் வீட்டிற்கு சஞ்சீவ் சென்றால் அவருக்கு சிக்கன் கறி செய்து கொடுப்பாராம். சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி பிராமணப் பெண் என்பதால் அவர் அசைவம் சாப்பிட மாட்டார். அந்த சமயங்களில் விஜய், தனது வீட்டில் இருந்து சைவ சாப்பாட்டையும் பார்சலாக கொடுத்து அனுப்புவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறாராம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார பொதுக் கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்த போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் அந்த சம்பவம் நடந்ததும் கரூரை விட்டு வெளியேறி விஜய், சென்னை நீலாங்கரை வீட்டிற்கு போனார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி போனவர்தான், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வராமல், பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு மட்டும் இரு முறை சென்று ஆலோசனை நடத்திவிட்டு மீண்டும் நீலாங்கரை வீட்டிற்கே வந்திருந்தார்.
கரூர் சம்பவத்தில் கூட 3 நாட்கள் கழித்தே இரங்கல் தெரிவித்திருந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது சிறு வயது நண்பனான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர் மனதில் மிகவும் வலியுடன் உள்ளார். நான் விஜய்யிடம் பேசினேன். இந்த நிலையில் என்னதான் ஆறுதல் சொன்னாலும் கோபம் வந்தாலும் வந்துவிடும். ஆகவே நான் எந்த ஆறுதலையும் சொல்லாமல் உடம்பை பார்த்துக் கொள், கடவுளை நம்பு என்று மட்டும் சொல்லிவிட்டேன்" என்றார்.
அது போல் சஞ்சீவ் கலந்து கொண்ட ஒரு பிரஸ் மீட்டில், "விஜய் ஏன் பிரஸ்ஸை சந்திப்பதே இல்லை, அவருக்கு என்ன பயமா" என கேட்டதற்கு, சஞ்சீவ், "அண்ணே ஏன் இப்படி கேக்குறீங்க, அவருக்கு என்ன பயம், சரியான நேரம் கிடைக்கும் போது அவர் நிச்சயம் உங்களை சந்திப்பார்" என பதிலளித்தார். மேலும் தொடர்ந்து விஜய் குறித்த கேள்விகளுக்கு, சினிமா நிகழ்வு குறித்த இந்த பிரஸ்மீட்டில் இது குறித்து வேண்டாமே என்றும் சஞ்சீவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கரூர் சம்பவத்தையொட்டி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கும் விதமாகவும் தவெக நிர்வாகிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் நண்பர் சஞ்சீவ், தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியதை இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமென்ட்டுகளை போட்டுள்ளனர்.
விஜய்யின் நண்பர் சஞ்சீவின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

அதில் ஒருவர் "விஜய் தீபாவளி கொண்டாட வேண்டாம்னு சொன்னார், யாருமே மதிக்கிற மாதிரி தெரியலை" என போட்டுள்ளார். "விஜய் தீபாவளி கொண்டாட வேண்டாம்ன்னு விடுத்த வேண்டுகோளை நெருங்கிய நண்பன் கூட மதிக்கல" என இன்னொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.
இன்னும் சிலர் விஜய் தனது தவெக நிர்வாகிகளுக்குத்தானே அந்த உத்தரவை போட்டிருக்கிறார். அதை கேட்டு சஞ்சீவும் தீபாவளி கொண்டாடக் கூடாது என நாம் சொல்ல முடியும்? அவர் என்ன கட்சியிலா இருக்கிறார்? என கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
-
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
தவெக ஆட்சி சிறப்பாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்! விஜய்யை சந்தித்த அன்புமணி பாராட்டு -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய்












Click it and Unblock the Notifications