இந்திய அரசியல் வரலாற்றில் கடந்த 26 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனை! அடித்து தூக்கிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு ஒட்டுமொத்தமாக 35 சதவீத வாக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட கட்சிகளில், அறிமுக தேர்தலிலேயே நாட்டிலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்ற கட்சிகளில் ஒன்றாக விஜய்யின் தவெக சாதனை படைத்து உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி புதிதாக களம் இறங்கிய விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க தயார் ஆகி வருகிறார் விஜய்.

TVK Leads Debut Election Vote Share Among New-Age Parties Since 2000

முதல் தேர்தலிலேயே விஜய் சாதனை

கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலேயே முதன்மை சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளது தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் திராவிட கட்சிகள் இரண்டையும் வீழ்த்தி விஜய் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இதுமட்டும் இன்றி, 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட கட்சிகளில், அறிமுக தேர்தலிலேயே நாட்டிலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்ற கட்சிகளில் விஜய்யின் தவெக முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 233இல் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது புதிய கட்சிகளுக்கான சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி

* டெல்லியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஆம் ஆத்மி கட்சி (AAP) 70 தொகுதிகளில் 28 இடங்களை வென்று 29.5% வாக்குகள் பெற்றது.
* ஆந்திரப் பிரதேசத்தில் 2014இல் அறிமுகமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP) 266 தொகுதிகளில் 70 இடங்களை கைப்பற்றி 27.9% வாக்குகளை பெற்றது.

லோக் ஜனசக்தி கட்சி

* பீஹாரில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லோக் ஜனசக்தி கட்சி (LJP) 178 தொகுதிகளில் 29 இடங்களை வென்று 12.6% வாக்குகளைப் பெற்றது.
* 2004இல் ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (TRS, தற்போது BRS) 54 தொகுதிகளில் 26 இடங்களை வென்று 6.7% வாக்குகளைப் பதிவு செய்தது.

பிரஷாந்த் கிஷோர் கட்சி

* பிரசாந்த் கிஷோர் அக்டோபர் 2, 2024 அன்று பீகாரில் ஜன் சுராஜ் கட்சி (Jan Suraaj Party) என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி பீகார் சட்டசபை தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது. முதன் முதலில் சந்திந்த இந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 3.44% வாக்குகளை மட்டுமே பெற்றது.

இப்படி கடந்த 26 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட எந்த ஒரு கட்சியும் முதல் தேர்தலிலேயே இவ்வளவு அதிக வாக்கு சதவீதங்களை பெற்றதில்லை. இதனால் விஜய்யின் தவெக 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஆதரவினையே இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது.

கட்சி (ஆண்டு) - மாநிலம் - வெற்றி/போட்டி - வாக்கு சதவீதம்

* TVK (2026) - தமிழ்நாடு - 108/233 - 35%
* AAP (2013) - டெல்லி - 28/70 - 29.5%
* YSRCP (2014) - ஆந்திரப் பிரதேசம் - 70/266 - 27.9%
* LJP (2005, பிப்) - பீஹார் - 29/178 - 12.6%
* TRS (2004) - ஆந்திரப் பிரதேசம் - 26/54 - 6.7%
* JSP (2024) - பீகார் - 0/238 - 3.44%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+