14 நாட்களாக ஐசியுவில் விஎஸ் பாபு.. 3 நாட்களாக மருத்துவ அறிக்கை கூட இல்லை.. அதிகரிக்கும் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தவெக எம்எல்ஏ VS பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. மருத்துவமனை தரப்பில் இருந்து உடல்நிலை சீராக இருப்பதாக சொல்லப்பட்டாலும் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருவது பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் விஎஸ் பாபு. கொளத்தூரில் திமுக சார்பில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டிருந்த நிலையில், அவரையே வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தவர் விஎஸ் பாபு!

VS Babu TVK

இந்த விஎஸ் பாபுவுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், 2 வாரங்கள் ஆகிவிட்ட போதிலும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக VS பாபுவின் உடல்நிலை குறித்து புதிய அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. கடந்த இரு நாட்களாக எந்தவொரு மருத்துவ அறிக்கையும் வெளியாகாத நிலையில், இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும், அவரது தற்போதைய உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மருத்துவமனை தரப்பில் இருந்து தெளிவான தகவல் இல்லாத நிலையில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்களும் தகவல்களும் பரவி வருகின்றன. இதனால் ஒருவித குழப்பமான ஒரு சூழல் உருவாகியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 19ம் தேதி விஎஸ் பாபு உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் விஎஸ் பாபுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அதன் பிறகு VS பாபுவின் உடல்நிலை குறித்து எந்தவொரு தகவலும் இல்லாததே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு 82 ஆயிரம் வாக்குகளை பெற்றார். திமுக தலைவர் ஸ்டாலின் 74 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் சுமார் 8800 வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலினை வீழ்த்தி தேர்தலில் வென்றிருந்தார் விஎஸ் பாபு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+