ஒரு விஷயத்தில் ஏமாற்றம்தான்.. ஆனாலும்.. வேளாண் பட்ஜெட் பற்றி வேல்முருகன் கருத்து
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கரும்பு, நெல் கொள்முதல் விலை உயர்வு ஆகிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, உணவு முறை ஆகியவற்றுடன் தொடர்புடைய பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பார்க்கிறது.
குறிப்பாக, கருப்பட்டி உள்ளிட்ட பனை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு 75 விழுக்காடு மானியம், மருத்துவ குணம் கொண்ட இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட இடுபொருள்களுக்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு, நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி மையம், சுய உதவிக்குழுவினர் ஆடு, மாடு, கோழி பண்ணைத் தொழில் தொடங்க மானியம், இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 பேருக்கு தலா 1 லட்சம் நிதி உதவி, பயிர் உற்பத்தியை அதிகரிக்க துவரை சாகுபடி சிறப்பு மண்டலம், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா ஆகிய திட்டங்கள் வரவேற்கதக்கது. இத்திட்டங்கள் அனைத்தும் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையது.

விவசாயிகள் பயனடைவார்கள்
சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடியை அதிகரிக்கும் திட்டம், வேளாண் இடுபொருள்களுக்கு மானியம், பயிர்காப்பீடு இழப்பீடு தொகை ரூ.2029 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை, பசுந்தாள், மண்புழு உரம் தயாரிப்போருக்கு நிதியுதவி, 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு, பயிர்காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு, 66 ஆயிரம் ஏக்கர் மாற்றுப்பயிருக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு, 7500 ஏக்கரில் இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி, மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் புதிதாக செயல்படுத்த ரூ.71 கோடி ஒதுக்கீடு என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் விவசாயிகள் பயனடைவர்.

காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தியது பாராட்டிற்குரியது
காலநிலை மாற்றத்தால் பாதிப்பு பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதால், காலநிலை மாற்றத்தை தாங்கி தமிழ்நாட்டில் வளரக்கூடிய விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, வேளாண் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

சிறப்புக்குரிய திட்டங்கள்
வேளாண் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 உழவர் பயிற்சி நிலையங்கள், வேளாண் துறையில் சிறந்த உற்பத்தியை தரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பரிசு, சோயாபீன்ஸ் பயிரை அதிகரிக்க ரூ.1,20 கோடி செலவில் ஒன்றிய அரசுடன் இணைந்து திட்டம், ரூ.300 கோடியில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கீற்று வழங்குதல் ஆகியவை சிறப்புக்குரியது திட்டங்களாகும்.

விவசாயிகளை ஊக்குவிக்கும் அறிவிப்புகள்
தமிழன் தளம் என்கிற புதிய இணையதளம் மூலம் விவசாயிகளுக்கு தகவல் பரிமாற்றம், வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 20 விழுக்காடு கூடுதல் மானியம், மயிலாடுதுறையில் ரூ.75 லட்சம் செலவில் புதிய மண் பரிசோதனைக்கூடம், தென்னை, மா, கொய்யா இடையே ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு, தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு, தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை, தக்காளி சாகுபடிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு, தேனி வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் வேளாண்மையை மேம்படுத்துவதோடு, விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டங்களாகும்.

மூலிகை தோட்ட திட்டத்தால் நன்மை
உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு, இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.5,157 கோடி டான்ஜெட்கோவிற்கு மானியம், பாரம்பரிய காய்கறிகள், மூலிகை பயிர்களை மீட்டெடுத்து ஊக்குவிக்க நடவடிக்கை, கண்ணாடி கத்தரி, வாசுதேவ நல்லூர் கத்தரியை வளர்க்க நடவடிக்கை, உள்ளூர் ரக காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம், திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூ. 381 கோடியில் உணவு பூங்காக்கள், ஊரக வளர்ச்சித் துறை மூலமாக ரூ. 1,245 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் அமைத்தல், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு அரசின் மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை ஆகிய திட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்.

இந்த விசயம் மட்டும் ஏமாற்றம் அளிக்கிறது
கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், திசு கரும்பு நாற்று வளர்ப்பு உள்ளிட்டவை ரூ.10 கோடி ஒதுக்கீடு, தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத்தொகை. இதன் மூலம் 1 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே நேரத்தில், கரும்புக்கான விலை, நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்வு ஆகிய அறிவிப்புகள் குறித்து, நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அரசுக்கு சில கோரிக்கைகள்
நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். சர்க்கரை ஆலைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களுக்கும் போதிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியத்தை, பொருட்களாக இல்லாமல், நேரடியாக அவரது வங்கிக் கணக்குகளில் தொகையாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது. இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தரமற்ற பொருட்களை தடுக்க முடியும்.

நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை
இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள நிலையில், உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்தவும், முறையான விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, திருவாரூரில் விவசாய பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது, பாராட்டுக்குரியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
முக்கியமாக, உற்பத்தி, சந்தை, உரிய விலை ஆகிய மூன்றை முக்கிய காரணிகளாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை, தொலைநோக்கு வாய்ந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. இந்த சிறப்பான பட்ஜெட்டை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்?












Click it and Unblock the Notifications