தவெகவிற்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கு.. அது என்ன தெரியுமா? விஜய்யை விட்டு விளாசிய திவ்யா சத்யராஜ்
சென்னை: திமுகவில் இணைந்துள்ள திவ்யா சத்யராஜ் அவ்வப்போது விஜய்யை விமர்சித்து வருகிறார். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது என்றும், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்றும் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர், கடந்த ஜனவரி மாதம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ், தவெக கட்சியையும், அக்கட்சியின் தலைவர் விஜய்யையும் கடுமையாக சாடி வருகிறார்.

தவெக மீது விமர்சனம்
திமுக தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் திவ்யா சத்யராஜ், விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில்தான், திவ்யா சத்யராஜ், தவெகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்று விமர்சித்துள்ளார். திவ்யா சத்யராஜ் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:-
திவ்யா சத்யராஜ்
"தவெவிற்கு என ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெகதான். பெண்களை மதிக்காத தொண்டர்கள் அதிகமாக உள்ள ஒரே கட்சியும் தவெகதான்" என்று சாடியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்து அக்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பதிலுக்கு திமுக தலைமை, தவெகவை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாகவே விமர்சித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலினும், தவெகவை இதுவரை நேரடியாக அட்டாக் செய்தது இல்லை.
அட்டாக் மோடில் வைஷ்ணவி
எனினும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவிற்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் கடும் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக தவெகவில் இருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தவெக தலைவர் விஜய் முன்வைக்கும் கருத்துக்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் நேரடியாக பதிலடி விமர்சனத்தை வைஷ்ணவி முன்வைத்து வருகிறார்.
கட்சியில் இருந்து விலகியதும், தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை, கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு மதிப்பு இல்லை, நீண்ட காலம் கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு மதிப்பு இல்லை, முக்கியமாக பெண்களை மதிப்பதே இல்லை என்றெல்லாம் கடுமையான புகார்களை வைத்து இருந்தார்.
வைஷ்ணவி வைத்த புகார்களை நிரூபிக்கும் விதமாக வைஷ்ணவி மீது ஆபாச தாக்குதல்களை இணையத்தில் விஜய் ரசிகர்கள் மேற்கொண்டனர். வைஷ்ணவியை ஆபாசமாக திட்டுவது, அவரின் இன்ஸ்டா பக்கத்தில் கடுமையாக அவரை விமர்சனம் செய்வது உள்ளிட்ட செயல்களில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டனர். தவெகவில் இருந்து விலகி வந்த வைஷ்ணவியை வைத்தே திமுக விஜய்க்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications