பெரம்பூரில் 70,000 ஓட்டு வித்தியாசத்தில் விஜய் வெற்றியா.. தவெக நிர்வாகி குபீர் போஸ்டர்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்று வாக்கு சதவீதத்துடன் முடிந்துள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெகவினரின் உலகமே தனி. தவெக நிர்வாகி ஒருவர் பெரம்பூர் தொகுதியில் விஜய் 70,000 வாக்கு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றதாக கூறி நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்னொரு விஷயம் தான் குபீர் ரகம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் போராடியுள்ளனர். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். இதனால் அரசியல் களத்தில் அனல் பறந்தது.

போஸ்டர் வைரல்
நடிகர் விஜய்யின் தவெகவுக்கு இது முதல் சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலில் தவெக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்து அசியலில் இறங்கியுள்ளார்.
தவெக களத்தில் தேர்தல் வேலைகளை பார்க்காவிடினும் சமூகவலைதளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். தவெக உத்தேச அமைச்சரவை என்று ஒவ்வொரு துறைக்கும், யார் அமைச்சர் என்கிற வரை கற்பனை குதிரையில் இருக்கிறார்கள். விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர்வது போன்ற போட்டோவை சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
கலாய்த்து
திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் வீரா. இவர் தவெகவில் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவர் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளார். விஜய் பெரம்பூர் தொகுதியில் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜயராஜ் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி என்று போஸ்டர் அடித்துள்ளனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் பிறகு நடந்தது தான் செம ஹைலைட். விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு நன்றி கூறி போஸ்டர் அடித்துள்ளார். இதை திமுக, அதிமுக கட்சியினர் கலாய்த்து வருகிறார்கள்.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!












Click it and Unblock the Notifications